1990ம் ஆண்டு தனது 27 வயதில் கொழும்பில் உள்ள கடை ஒன்றில் கூலிவேலை செய்துவந்துள்ளார் வைரவநாதன் என்னும் தமிழர். அப்போது கொழும்பில் ஏதோ குண்டு வெடிபு நிகழ்ந்ததாம். அதற்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருத்தி இவரைப் பிடித்துச் சென்றுள்ளார்கள் சிங்கள புலனாய்வுப் பிரிவினர். அதுவும் கைதுசெய்யப்படவில்லை. வைரவநாதனை கடத்திச் சென்றுள்ளார்கள். கடந்த 25 வருடங்களாக அவரை ஒரு ரகசிய தடுப்பு முகாமில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். அம்மா இறந்துபோனது தெரியாது ! அப்பா இறந்துபோனதும் தெரியாது. சொந்த பந்தங்களுக்கு என்ன ஆனது என்றும் தெரியாது ! கலியாணம் காட்சி இல்லை ! அப்படியே இருந்து 53 வயது முதியவர் ஆகிவிட்டார் வைரவநாதன்.
பெயர் தான் வைரவநாதன் , அந்த வைரவர் கூட அவரை காப்பாற்றவில்லை. தற்போது ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் அவர் இருப்பதாகவும், வேண்டுமாயின் வந்து அழைத்துச் செல்லுமாறும், நீதிமன்றமூடாக கடிதம் ஒன்று அவரது யாழ்ப்பாண விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சுன்னாகம் மத்தி, தேவாலய வீதியில் அவரது சகோதரி வசித்து வருகிறார். சகோதரியும் சகோதரியின் கணவருக்கும் செவ்வாய்கிழமை இக் கடிதம் கிடைத்துள்ளது. காணாமல் போன வைரவநாதனை தேடித் தேடி அலைந்தே பெற்றோர்கள் உயிர் பரிதாபமாகப் பிரிந்தது. எவ்வளவு கஷ்டம் ! எப்படியான சூழல் ? நினைத்துக்கூட பார்க முடியாத ஒரு நிலை... தற்போது அவரது சகோதரி மற்றும் கணவர் ஆகியோர் வைரவநாதனை அழைத்துவர கொழும்பு புறப்பட்டுள்ளார்கள் என்று அறியப்படுகிறது.
தனது முழு வாழ்க்கையையும் தொலைத்து நிற்கும் இந்த வைரவநாதனுக்கு புலம்பெயர் தமிழர்களாவது தம்மாலான சிறிய உதவிகளை செய்யமுடியும். இலங்கையில் நடக்கும் காணமல் போகும் நிகழ்வுகளின் பிண்ணனியில் என்ன நடக்கிறது என்பதனை, ஆதாரமாகக் கொண்டுள்ள ஒருசில தமிழர்களில் இவரும் ஒருவர்.
http://www.athirvu.com/newsdetail/1431.html
Geen opmerkingen:
Een reactie posten