தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

நிறைவேற்று அதிகார முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றிடம் வழங்கினேன்!- ஜனாதிபதி

இந்திய உயர்ஸ்தானிகர், சந்தித்தமையை சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளார்! -எம்மைப் பயன்படுத்தி இனத்துவேஷத்தை கிளப்புவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கோம்!- சம்பந்தன்!
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 01:05.25 AM GMT ]
தாம், இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வந் சிங்ஹா, சம்பந்தனையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன
இந்த சந்திப்பு சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த சந்திப்பை சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் இது வழமையான சந்திப்பு மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைப்பற்றி ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2ம் இணைப்பு
எம்மைப் பயன்படுத்தி இனத்துவேஷத்தை கிளப்புவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கோம்
எம்மைப் பயன்படுத்தி இனத்துவேஷத்தை கிளப்பி தேர்தல் முடிவினை சாதகமாக்கிக் கொள்வதற்கு எவருக்கும் நாம் சந்தர்ப்பம் வழங்க மாட்டோம். ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய முடிவினை எடுப்பது என்பது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி மனச்சாட்சியின்படி தீர்மானம் எடுப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் முடிவு குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உரிய நேரத்தில் மக்களுடன் கலந்துரையாடி மனச்சாட்சியின்படி தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடியதான முடிவினை நாம எடுப்போம்.
எம்மைப் பயன்படுத்தி இனத்துவேஷத்தை கிளப்பி தேர்தல் முடிவுகளை சாதகமாக்கிக் கொள்ள எவருக்கும் நாம் அனுமதி அளிக்க மாட்டோம்.
எம்மைப் பயன்படுத்தி இனத்துவேஷத்தை கக்குவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இந்த விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம்.
ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் நாம் அவரசப்படத் தேவையில்லை. இந்த விடயத்தில் அமைதி காக்குமாறு எமது கட்சியினருக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYloy.html
நிறைவேற்று அதிகார முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றிடம் வழங்கினேன்!- ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:58.01 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை தாம் நாடாளுமன்றிடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி கன்னொருவ மைதானத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பில் மாற்றங்களை செய்யும் நோக்கில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நிறுவியுள்ளேன்.
இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு ஒராண்டு காலம் கடந்துள்ளது.
ஜனாதிபதி என்ற போதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பினை நாடாளுமன்றிடம் விட்டுவிட்டேன்.
எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமது கருத்தை வெளியிடாத ஐக்கிய தேசியக் கட்சியினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு கோரி நாடு முழுவதிலும் பிரசாரம் செய்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது.
தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுத்தேன்.
தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அரசாங்கம் தெளிவான திட்டமொன்றை முன்வைத்துள்ள நிலையில் அதனை பலவீனப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென சிலர் தெரிவுக்குழுவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் மற்றுமொரு தரப்பினர் நிறைவேற்று அதிகாரம் அவசியமானது என தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சுமார் 20 வரையிலான ஆசனங்கள் காணப்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச்செய்தால் “சம்பந்தன் சரணம் கச்சாமி” என்று சொல்லி கூட்டமைப்பின் பின் செல்ல நேரிடும்.
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க, பிரிவினைவாதத்தை தடுக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொருளாதாரத்தை வலுப்படுத்த, வெளிநாட்டு அழுத்தங்களிலிருந்து நாட்டை பாதுகாக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாகின்றது.
நாம் நாட்டை காட்டிக்கொடுக்கவோ அல்லது 600 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண பிடிவிராந்து வழங்கவோ உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYmx7.html

Geen opmerkingen:

Een reactie posten