[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:32.59 PM GMT ]
மின்சார சபையில் நிகழ்ந்துள்ள ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து அண்மையில் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.
அதன்போது அவர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மின்சாரத்துறைக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் சுமார் 150 கோடி ரூபா மோசடி நடைபெற்றிருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
அமைச்சர் பவித்திராவின் நாடாளுமன்ற உரையை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிடுமாறு கோரியும், அதற்காக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி குற்றப் புலனாய்வுத்துறையினர் இந்த மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.
குற்றப்புலனாய்வுப் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சார்ஜண்ட் யூ. ஆர். எஸ். சில்வா என்பவரே குறித்த விசாரணைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுடன், சரத் பொன்சேகா உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிரான அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmx0.html
தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகவில்லை!– மைத்திரிபால சிறிசேன
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:38.53 PM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியான தேர்தல் ஒன்றுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆயத்தமாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் இன்னமும் எவ்வித ஆயத்தங்களையும் செய்யவில்லை.
ஆளும் கட்சியில் இருப்பர்கள் எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆளும் கட்சியில் எவரும் அதிருப்தியுடன் இருப்பதாகத் தெரியவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவன்றி வேறு எவருமல்ல.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் போட்டியிடப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியில் யார் பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளையே பிரதிபலிப்பார் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்ட செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmx1.html
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!– ரஞ்சன் ராமநாயக்க
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:46.11 PM GMT ]
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் உரிய இடங்களுக்கு நான் முறைப்பாடு செய்துள்ளேன்.
மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்ற இலங்கைப் பெண்கள் அமானுஸ்யமான சித்திரவதைகளை அனுபவிக்க நேரிட்டுள்ளது.
அதற்காக பேசும் போது அடி வாங்க அல்லது உயிர்த்தியாகம் செய்ய எனக்கு நேரிட்டுள்ளது.
நாடாளுமன்றில் நான் குரல் எழுப்பும் போது தேநீர் அருந்தச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட ஓடி வந்து எனக்கு பதிலளிக்கின்றார்கள்.
அநீதிக்கு எதிராக நான் கடுமையாக பேசும் காரணத்தினாலேயே இவ்வாறு ஓடி வந்து பதிலளிக்கின்றார்கள்.
எனது பேச்சுக்கள் சிலருக்கு அதிக வலியை ஏற்படுத்துகின்றது.
பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. எனது உயிர் பற்றி கூட நிச்சயமில்லை.
முறைப்பாடு செய்ய வேண்டிய இடங்களுக்கு முறைப்பாடு செய்துள்ளேன்.
அதிகளவில் தொலைபேசில் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmx2.html
வடக்கு கிழக்கு மக்கள் கடுமையான வீட்டுப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்!– செல்வம் அடைக்கலநாதன்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:01.50 AM GMT ]
நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினை பாரதூரமான நெருக்கடி நிலையில் காணப்படுகின்றது.
இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
வன்னியில் வீட்டுத் திட்டங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை.
இந்திய வீட்டுத் திட்டங்கள் அமுல்படுத்தப்படாத இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
வடக்கு இளைஞர் சமூகத்தின் வீட்டுப் பிரச்சினைகள் பாரியளவில் காணப்படுகின்றது.
கடன் அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுக்கப்படும் போது ää வேலையில்லாப் பிரச்சினை காரணமாக வீட்டுக் கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே வடக்கு இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYmx4.html
Geen opmerkingen:
Een reactie posten