புஸல்லாவ நகரில் புதிய நுட்பத்தில் ஈசிகாஷ் (e - cash) கொள்ளை - மக்களை கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 02:02.16 AM GMT ]
இந்தச் சம்பவம் இரு வர்த்தக வியாபாரிகளை மையமாக வைத்து இடம்பெற்றுள்ளது.
புஸல்லாவ நகரத்தில் காணப்படும் பார்மசி கடை உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது.
(10.11.2014) நான் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கதைக்கின்றேன், 12 பால்மா பைக்கட்டுடன் நான் கூறும் இந்த இலக்கத்திற்கு (0779859321) 9800.00 ரூபா ஈசிகாஷ் (e - cash) போட்டு மொத்தமாக பில்லுடன் முச்சக்கரவண்டியில் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.
கடை உரிமையாளரும் அவ்வாறே செய்து பால்மா பில் 12,000.00 உட்பட ஈசிகாஷ் (e - cash) 9800.00 உடன் 21,800.00 பெறுவதற்கு புஸ்ஸல்லாவ பொலிஸ்சிற்கு போயுள்ளார்.
அதேபோல் இன்னும் ஒரு பலசரக்கு கடை உரிமையாளருக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது.
நான் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கதைக்கின்றேன். எனக்கு தனி வீடு ஒன்று உள்ளது. அதற்கு அரிசி 45 கிலோ, தேங்காய் 25, பால்மா 6 கிலோ, உருளைக்கிழங்கு 15 கிலோ, வெங்காயம் 15 கிலோ உடன் நான் கூறும் இந்த இலக்கத்திற்கு (0779859321) 9800.00 ரூபா ஈசிகாஷ் (e - cash) போட்டு மொத்தமாக பில்லுடன் முச்சக்கரவண்டியில் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.
கடை உரிமையாளரும் அவ்வாறே செய்து பொருட்களின் பில் 19,600.00 உட்பட ஈசிகாஷ் (e - cash) 9800.00 உடன் 29,400.00 பெறுவதற்கு பொலிஸ்சிற்கு போயுள்ளார்.
அங்கோ பல நிமிடங்கள் காத்திருந்த வியாபாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எங்கே என்று கேட்டுள்ளார்கள்.
அப்போதுதான் பதில் வந்தது. அவர் வேலை நேர விடுமுறையில் கொழும்பு சென்றுள்ளார் என்று.
பின்னர் பதறிப்போய் பொலிஸாரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு ஈசிகாஷ் (e - cash)யை நிறுத்துவதற்காக எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
இவ்விரு சம்பவங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் அவர்களை தொடர்பு கொண்ட போது,
நான் தற்போது வகுப்பு ஒன்றின் காரணமாக கொழும்பில் இருக்கின்றேன். நடந்த சம்பவத்ததை கேள்விப்பட்டேன்.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் இது தொடர்பில் புஸ்ஸல்லாவ நகர வர்தகர்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்றும் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்று கூறியதுடன், நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெற மேலும் வாய்ப்புக்கள் உள்ளது. அதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறான நிலையில் மலையகத்தில் பணம் பறிக்கும் செயற்பாடுகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
உதாரணமாக வீட்டுப்பொருட்கள் கொண்டுவந்து தருகின்றோம் என்று அட்வான்ஸ் வாங்குதல், பின் தலைமறைவு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தொழில் பெறுவதற்கு, ETF, EPF பெறுவதற்கு, தெல்தெனிய பிரதேசத்தில் மண்சரிவினால் பாதிக்கபட்டவர்களுக்கு அரச காணி பெற்று தருவதாக பணம் வாங்கியமை, பிரமிட் செயற்திட்டம் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவற்றிலிருந்து மக்கள் அவதானமாக இருப்பதோடு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு
• பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் - 0777 349429
• பொலிஸ் நிலையம் - 0812478222
• பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் - 0777 349429
• பொலிஸ் நிலையம் - 0812478222
http://www.tamilwin.com/show-RUmszBSVKYno4.html
சம்பிக்க ரணவக்க, டியூ குணசேகர போன்றவர்கள் நாடகமாடுகின்றனர்: ஐ.தே.க குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 02:27.01 AM GMT ]
அமைச்சுப் பதவி மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களுக்காக 17ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் 18ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும் நாடாளுமன்றில் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்த தரப்பினர் இன்று போலியாக நாடகமாடி வருகின்றனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென இன்று கோரிக்கை விடுத்து வரும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, டியூ.குணசேகர போன்றவர்கள் போலி நாடகமாடி வருகின்றனர்.
17ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் 18ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும் ஆதரவு தெரிவித்த இவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் பொய்யாக கோசமெழுப்புகின்றனர். எனினும் காலம் தாமதித்தேனும் அத்துரலிய ரதன தேரர் உண்மை நிலைமையை உணர்ந்து கொண்டுள்ளார்.
குடும்பவாத ஏதேச்சாதிகார ஆட்சியினால் நாடு எதிர்நோக்கக்கூடிய பாதக விளைவுகளை புரிந்து கொண்டமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
நாடு அடைந்துள்ள அழிவுகளிலிருந்து மீட்டு எடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
ஆளும் கட்சிக்குள் இன்று பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சமசமாஜ கட்சி போன்றன ஆளும் கூட்டணியுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYno6.html
வடக்கில் வாக்குகளைப் பெறுவது சவால்! கூட்டமைப்புக்கு ஐ.தே.க அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 02:36.10 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பொது எதிரணியுடன் கைகோர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என ஐ.தே.க அழைப்பு விடுத்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த சிங்கள வாக்குகளை எதிர்பார்த்து தேர்தலில் குதிப்பது முட்டாள்தனமான செயல். பௌத்த சிங்கள வாக்குகள் இரு தரப்பினருக்குமே கிடைக்கும். ஆனால், சிறுபான்மை மக்களின் வாக்குகள் எவரேனும் ஒரு தரப்பினையே பிரதிநிதித்துவப்படுத்தும்.
அதன் காரணத்தினாலேயே அரசு வடக்கின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் மக்கள் அரசின் மீதான அதிருப்தியில் இருக்கின்றமை அரசுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அரசுக்கு இல்லை என்பதும் அரசுக்குத் தெரியும்.
எனவே, சிறுபான்மை மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதே அரசுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இருக்கும் சவாலாகும். அதேபோல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதே அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப் பெரிய சவாலாகும்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவு யாருக்கு என்பதை இதுவரையில் தெரிவிக்காதுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பது இந்த அரசினால். வடக்கில் இராணுவ ஆட்சி நடத்தப்படுவதும் இந்த அரசினால்.
எனினும், இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதில் பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்துள்ளது. தற்போது பொது எதிரணியை நாம் உருவாக்கி வருகின்றோம்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் உதவிகளும் எமக்குத் தேவைப்படுகின்றது. அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதும் எமது பொது எதிரணியின் ஒரு கோரிக்கையே. அதனைப் பலப்படுத்த - தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் கைகோர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYno7.html
Geen opmerkingen:
Een reactie posten