woensdag 12 november 2014

அகதிகள் தொடர்பாக சுமத்தும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது: அவுஸ்திரேலியா


தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் விரைவில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார்!: பிரபா கணேசன்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 05:40.05 AM GMT ]
 விரைவில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை தொலை தொடர்புத் துறை அமைச்சர் பிரபா கணேஷ் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து பேரும் போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு கடந்த 30 ம் தேதி கொழும்பு உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தன.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் 15 நாள் கால அவகாசம் கொடுத்துள்ளது.
இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை 3 நாளில் விடுவிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இலங்கை தொலை தொடர்புத் துறை அமைச்சர் பிரபா கணேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்த பின் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
தமிழக மீனவர்களின் தூக்குக் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று அதிபர் ராஜபக்ச என்று கூறினார். அப்படி மேல்முறையீடு செய்தால், தமிழக மீனவர்கள் விடுதலை ஆவதில் மேலும் கால தாமதம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிபர் ராஜபக்ச கூறினார்.
மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில் தமிழக மீனவர்கள் 5 பேரும் 2 அல்லது 3 நாட்களில் விடுதலையாகி விடுவார்கள் என்றும் என்னிடம்  ராஜபக்ச தெரிவித்தார்.
அதே சமயத்தில் இந்த தண்டனையை எதிர்த்து இந்திய தூதரகம் மேல் முறையீட்டு வழக்கை நடத்தினால் அது முடிய 6 மாதங்களுக்கு மேல் ஆகி விடும் என்றார்.
எனவே இது தொடர்பாக தனது மன்னிப்பு வழங்கும் முடிவு பற்றி கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கும்படி அதிபர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
நானும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விட்டேன் என்று கூறினார். என்றார்.
இந்த செய்தி மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnv3.html


அகதிகள் தொடர்பாக சுமத்தும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது: அவுஸ்திரேலியா
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 06:02.02 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சம்பந்தமாக அந்த நாட்டின் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த குற்ற்ச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள சென்னையில் உள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி இதனை கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கை கடைப்பிடித்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களில் சுமார் 1500 பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை உண்மையானதல்ல என தெரிவித்துள்ள சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக்கான அவுஸ்திரேலிய தூதரக பிரதிநிதி அது நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாவுரு தீவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
சட்டவிரோதமின்றி சரியான வழியில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்களை வரவேற்க அவுஸ்திரேலியா என்றும் தயாராகவே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten