woensdag 12 november 2014

பிரபாகரனின் 60 வது பிறந்த நாளையொட்டி 60 கவிஞர்கள் நடத்தும் "பிரபாகரன் மாலைப் பொழுது" !


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் 60 கவிஞர்கள் கூடி கவியரங்கம் நடைபெற உள்ளது என அறிவித்துள்ளார்கள். புலவர் புலமைப் பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் நடைபெற உள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
கிறித்து பிறப்பிற்கு முந்திய நாளான 24ம் திகதி கிறிஸ்மஸ் மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று, தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது பிறந்த நாளான 26ம் திகதிக்கு முந்தைய நாளான 25ம் திகதி ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ என்று கடைப்பிடிக்கும் விதமாக இந்த கவியரங்கு நடைபெற உள்ளது. 25 இரவு 12.00 மணிவரை நடைபெறவுள்ள இன் நிகழ்வின் இறுதியில் தலைவர் பிரபாகரன் அவர்களின் , பிறந்த நாளும் மலர்ந்திருக்கும் அல்லவா ? உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க விருப்பினால், கீழ் காணும் படிவத்தில் தெரிவிக்கலாம் !

Geen opmerkingen:

Een reactie posten