vrijdag 14 november 2014

ராமனுக்கு பின் இலங்கையை அழித்த ரோகித் சர்மா: வாழ்த்திய கருணாநிதி!

கொல்கத்தாவில் நேற்று இலங்கைப் பந்து வீச்சை அழித்த ரோகித் சர்மாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராமருக்கு பின் இலங்கையை துவம்சம்  செய்துள்ளார் ரோகித் சர்மா என கருணாநிதி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
கருணாநிதி தனது வாழ்த்து செய்தியில்,
இந்தியாவே ரோகித் சர்மாவை பாராட்டிக் கொண்டிருக்கின்றது. கிரிக்கெட் உலகமே இவரைப் பார்த்து வியந்து கொண்டிருக்கின்றது. நானும் பாராட்டுகிறேன்.
இந்திய அரசும் அவரைப் பாராட்டுமென்று எதிர்பார்க்கிறேன். இதுவரை நான்கு முறை 200க்கு மேல் ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் ரோகித் சர்மாவே இரண்டு முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
அதிலும் இந்த முறை 264 ரன்கள் குவித்து உலக அளவில் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் இவர் தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக "பவுண்டரிகள்" அடித்தவரும் இவர் தான், அதிக "சிக்சர்கள்" அடித்தவரும் இவர் தான்.
ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் பொட்டியில்,173 பந்துகளில் 264 ரன்களை எடுத்து உலக சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYls4.html

Geen opmerkingen:

Een reactie posten