vrijdag 14 november 2014

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது!

பாப்பரசரின் இலங்கை பயணம் தொடர்பான கால அட்டவணையை வத்திகான் வெளியிட்டது
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:40.23 PM GMT ]
புனித பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் திருத்தந்தையின் இலங்கை விஜயம் தொடர்பான கால அட்டவணையை வத்திகான் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பான தகவல் மற்றும் ஊடகப் பணியகம் இந்த அறிக்கையை இலங்கை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது.
பாப்பரசர் ஜனவரி 12 ஆம் திகதி ரோமின் ஃயுமிசினோ விமான நிலையததில் இருந்து இலங்கை புறப்பட உள்ளார்.
ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை வரும் பாப்பரசர் 15 ஆம் திகதி முற்பகல் கொழும்பில் இருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
2015 ஜனவரி 12 திங்கள்-
19.00 ரோம் ஃயுமிசினோ விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படுதல்
2015 ஜனவரி 13 செவ்வாய்-
09.00 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தல், வரவேற்பு வைபவம்.
13.15. கொழும்பு ஆயர் இல்லத்தில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயரை சந்தித்தல்.
17.00 ஜனாதிபதி மாளிகையில் இலங்கை ஜனநாயக சோலிசக் குடியரசின் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு.
18.15. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் சர்வ மத தலைவர்களுடன் சந்திப்பு.
2015 ஜனவரி 14 புதன்
08.30 கொழும்பு காலிமுகத் திடலில் திவ்ய நற்கருணை ஆராதனை மற்றும் புனித ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்துதல்.
14.00 மன்னார் மடு மாத தேவாலயம் நோக்கி புறப்படுதல்.
15.30 மடு ஜெபமாலை தேவாலயத்தில் தேவ மாதவுக்கு திருப்பலி பூஜை ஒப்புகொடுத்தல்.
16.45. கொழும்பு நோக்கி புறப்படுத்தல்
2015 ஜனவரி 15 வியாழன்
08.15 போவலன 16வது பெனடிக் ஆண்டகை கலாசார நிலையத்தின் தேவாலயத்திற்கு செல்லுதல்.
08.45. கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிரியாவிடை வைபவம்.
09.00. கொழும்பில் இருந்து மணிலா புறப்படுதல்
http://www.tamilwin.com/show-RUmszBSYKYls3.html
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:27.36 PM GMT ]
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமாக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்ற 126 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. சுமார் பதின்மூன்று லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடக்கில் தற்போது தொண்ணூற்றி ஐந்துவீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. ஐந்து சதவீத நிலப்பரப்பில் மட்டுமே கண்ணிவெடிகள் அகற்றும் பணி எஞ்சியுள்ளது.
கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு, குடிநீர் வசதிகள், அடிப்படை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYls2.html

Geen opmerkingen:

Een reactie posten