ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக அதன் தலைவரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது என ஏற்கனவே தீர்மானித்துள்ளன.
விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குகிறது.
இதனிடையே இலங்கை கலைஞர்களின் தேசிய அமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க போவதாக இன்று அறிவித்துள்ளது.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjq4.html
Geen opmerkingen:
Een reactie posten