தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 november 2014

யாழ். மாதகல் பகுதியில் காணி சுவீகரிப்பின் 2ம் கட்டம் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

எதிர்க்கட்சிகளின் வேலைத்திட்டத்திற்கு சோபித தேரர் தொடர்ந்தும் ஆதரவு: ரவி கருணாநாயக்க
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 10:43.58 AM GMT ]
அரசாங்கத்தின் அழுத்தங்களை பொருட்படுத்தாது எதிர்க்கட்சிகளின் பொது வேலைத்திட்டத்திற்கான ஆதரவு தொடரும் என மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் உதவி தலைவராக ரவி கருணாநாயக்க நேரில் சென்று நலன் விசாரித்த போதே சோபித தேரர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் சோபித தேரர் அமைதியான இருக்க தீர்மானித்துள்ளதாக பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் சோபித தேரர் முக்கிய பங்கு வகிப்பார் என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பான விடயத்தில் சோபித தேரர் உறுதியாக இருக்கின்றார். அவரது செயற்பாடுகள் எவராலும் அமைதிப்படுத்திவிட முடியாது எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் இல்லத்தில் சோபித தேரர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்ததாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
பொது எதிர்க்கட்சிகள் கொழும்பில் புதன்கிழமை நடத்திய பொதுக் கூட்டத்தின் பின் இந்த சந்திப்பு நடந்தாகவும் அதனை டிரான் அலஸ் ஏற்பாடு செய்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த சந்திப்புக்கு பின் திடீரென சுகவீனமுற்ற சோபித தேரர் மாலபேயில் உள்ள நெவில் பெர்ணான்டோவின் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர் நெவில் பெர்ணான்டோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர்.
எவ்வாறாயினும் சோபித தேரரை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட ரவி கருணாநாயக்க, கடந்த சில தினங்களில் தேரரின் உடலில் சீனியின் அளவு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
அழுத்தங்கள் காரணமாக சோபித தேரருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் வதந்திகளை ரவி கருணாநாயக்க மறுத்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjq6.html
வீழ்ச்சியடைந்து வரும் மகிந்தவுக்கான மக்கள் ஆதரவு
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 11:18.38 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு அரச திணைக்களம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கான மக்கள் ஆதரவு 54 வீதத்தில் இருந்து 47 வீதமாக படுவேகமாக குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு இருந்த மக்கள் ஆதரவு 7 வீதமாக குறைந்துள்ளமையானது அரசாங்கத்தின் விசேட கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத பின்னணியில் ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு குறைந்துள்ளமை சிக்கலுக்குரியது என கருத்து கணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை அறிவித்தால் ஜனாதிபதிக்கான மக்களின் ஆதரவு மேலும் வீழ்ச்சியடையலாம் எனவும் இதனால், ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி அவதானக்கு உள்ளாகலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjry.html

யாழ். மாதகல் பகுதியில் காணி சுவீகரிப்பின் 2ம் கட்டம் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 11:54.20 AM GMT ]
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் காணி உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் கடற்படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் 2ம் கட்ட முயற்சியும் பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியோரின் கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
மாதகல் துறைமுகம் பகுதியில் போரின் பின்னர் கடற்படையினர் முகாமிட்டு தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள 4பரப்பு காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் முயற்சிகள் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினமும் கடற்படையினர் மற்றும் நில அளவையாளர்கள் குறித்த பகுதிக்கு வந் து மக்களுயை காணியை அளவீடு செய்ய முயற்சித்தனர்.
காணி உரிமையாளர்கள் காணி ஆவணங்களுடன் அங்கே வந்து தங்களுடைய காணி என உறுதிப்படுத்தினர். மேலும் எங்களுடைய அனுமதியில்லாமல் கடற்படைக்கு காணி வழங்க முடியாது, என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனையடுத்து காணி உரிமையாளர்களிம் காணி ஆவணங்களின் பிரதிகளையும், காணியை கடற்படைக்கு வழங்கமாட்டோம் என எழுத்துமூலம் கடிதங்களையும் பெற்றுக்கொண்டு நில அளவையாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி காணி சுவீகரிப்பு தொடர்பாக மக்கள் கருத்து கூறுகையில்,
போருக்கு முன்னர் ஊருக்குள் இருந்த கடற்படை முகாமை போருக்குப் பின்னர் கடற்கரையில் கொண்டு வந்து போட்டுள்ளார்கள். இதனால் எங்களுடைய படகுகளை கரைக்கு கொண்டுவர முடியவில்லை.
கருவாடு காயப்போட முடியவில்லை. எல்லாவற்றுக்கும் கடற்படை குறுக்கே நிற்கின்றது. இதனால் எங்கள் வாழ் வாதாரம் ஒரு பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு மேல் எங்கள் காணிகளையும் சுவீகரிப்பதனால் நாங்கள் இனி குடும்பத்தோடு தற்கொலையே செய்யவேண்டும்.
எனவே எங்கள் எதிர்ப்பை மீறி காணிகளை அளந்தால் எமக்கு வேறு வழியில்லை. நாங்கள் தற்கொலை செய்வோம். அதனை அவர்கள் விரும்புவார்களா பார்ப்போம்.
மேலும் இந்த விடயத்தில் பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjrz.html

Geen opmerkingen:

Een reactie posten