vrijdag 14 november 2014

உச்சநீதிமன்றின் தீர்ப்பு என கூறினாலும் அலரி மாளிகையிலேயே தீர்ப்பு எடுக்கப்பட்டது!– ஜே.வி.பி.

நாட்டின் இளைஞர்கள் எதிர்காலம் பற்றி நம்பிக்கையின்றி வாழ்ந்து வருகின்றனர்!– விஜித ஹேரத்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:14.40 AM GMT ]
நாட்டின் இளைஞர்கள் எதிர்காலம் பற்றி நம்பிக்கையின்றி வாழ்ந்து வருவதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் இளைஞர் பற்றி எழில்மிகு வசனங்களைப் பேசுகின்றது.
எனினும், இளைஞர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எதிர்காலம் பற்றி நம்பிக்கையில்லாத நிலைமையே காணப்படுகின்றது.
இளைஞர் சமூகம் அதிகளவில் நாட்டில் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தொழிற்பயிற்சி அதிகாரசபையின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாகவே காணப்படுகின்றது.
அதிகாரசபையில் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறா? இளைஞர்களுக்கான நாளையை உருவாக்குவது?
பயிற்சி வழங்கும் இளைஞர்களின் சோற்றுப் பார்சலில் கூட அதிகாரிகள் தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த நிலைமை மிகவும் வருந்தத்தக்கது என விஜித ஹேரத் நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYmx5.html
அமைச்சர் ஜெயராஜ் கொலை வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:23.17 AM GMT ]
முன்னாள் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா கொண்டாட்ட மரதன் ஓட்டப் போட்டி ஆரம்ப நிகழ்வின் போதுää மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர்.
2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
கம்பஹா உயர் நீதிமன்றில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உயர் நீதிமன்ற நீதவான் விடுமுறை காரணமாக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஊடாக 31 குற்றச்சாட்டுக்களை சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் குரே,  காங்கேசன்துறையைச் சேர்ந்த செல்வராஜ் கிருபாகரன் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகியோர் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYmx6.html
மக்களின் கஸ்டங்களை புரிந்துகொள்ளாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்!- சஜித் பிரேமதாச
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 01:37.23 AM GMT ]
மக்களின் கஸ்டங்களை புரிந்துகொள்ளாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அண்மையில் அம்பாந்தோட்டை பல்லேமலல என்னும் இடத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பற்றி சிந்திக்காது தங்களது வாய் வயிற்றை நிரப்ப முயற்சிக்கும் இந்த எதேச்சாதிகார அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆச்சரியமான மாவட்டமாக ஆட்சியாளர்கள் பிரசாரம் செய்யும் அம்பாந்தோட்டை மக்கள் கடுமையான வறுமையில் வாடுகின்றனர்.
ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற போதிலும் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
மக்களின் வறுமை நிலைமைகளை மூடி மறைத்து போலியான அபிவிருத்தியை பிரசாரம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களினால் வறிய கிராம மக்களுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைத்துள்ளன?
பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக ஆட்சியாளர்கள் வாயையும் வயிற்றையும் நிரப்பிக் கொள்கின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYloz.html
உச்சநீதிமன்றின் தீர்ப்பு என கூறினாலும் அலரி மாளிகையிலேயே தீர்ப்பு எடுக்கப்பட்டது!– ஜே.வி.பி.
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 01:44.46 AM GMT ]
ஜனாதிபதி மூன்றாம் தவணைக்கு போட்டியிட முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கமானது, உச்ச நீதிமன்றினால் எடுக்கப்படவில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
மூன்று தடவைகள் ஜனாதிபதி மஹிந்த போட்டியிட முடியும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் அளித்த சட்ட விளக்கமானது அலரி மாளிகையில் எடுக்கப்பட்டது ஜே.வி.பி.யின் வட மத்திய மாகாண உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணை போட்டியிடுவது தொடர்பில் சந்தேகம் நிலவிய காரணத்தினால் ஜனாதிபதி உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்தவின் நிலைப்பாட்டை நாட்டின் நிலைப்பாடாக மாற்றும் முயற்சியே இதுவாகும்.
நீதிமன்றின் தீர்ப்பு ஜனநாயகமானதல்ல. ஒரு தலைப்பட்சமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விளக்கத்தை நீதிமன்றம் அளித்திருக்க வேண்டும். சட்டத்தை விளக்கத்தை கோரிய ஜனாதிபதியே விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இந்த சட்ட விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நாட்டு மக்களுக்கு அவசரமான ஜனாதிபதி தேர்தல் ஒன்று அவசியமில்லை.
அவசரமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மட்டுமே காணப்படுகின்றது.
இதுவரையில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து தீர்மானிக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் மிகவும் பொருத்தமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்பார்ப்பதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlo0.html

Geen opmerkingen:

Een reactie posten