vrijdag 14 november 2014

கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மண் அகழ்வு! தடுக்குமாறு வடமாகாண அமைச்சரிடம் மக்கள் கோரிக்கை!

பெருந்தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்: இராஜதுரை
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 02:20.42 AM GMT ]
பெருந்தோட்ட தமிழ் மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
பெருந்தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை இவர்கள் நீண்ட காலமாக லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.
மஹிந்த சிந்தனையில் பெருந்தோட்ட மக்களுக்கு காணி துண்டு வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த யோசனைத் திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlo1.html
15 அடி பள்ளத்தில் விழுந்து டிப்பர் வாகனம் விபத்து (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 03:32.08 AM GMT ]
ஹற்றன், கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று, வட்டவளை குயில்வத்தை பகுதியில் வீதியை விட்டு விலகி 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 5.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நேரிட்டுள்ளதாக பொலிஸார்  கூறுகின்றனர்.
 கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இவ்வாகனத்தில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும் இருவரும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடுமையான மழை காரணமாக தோட்ட மருந்தக தொகுதி பாதிப்பு!
நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசசபைக்கு உட்பட்ட இரட்டைப்பாதை நீவ் பீகொக் தோட்ட மருந்தகத்தின் மேல் பாரிய மாமரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மருந்தகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்த மருந்தக தொகுதியில் மருத்துவ நிலையம், தோட்ட மருத்துவ உதவியாளரின் குடியிருப்பு, பொது சுகாதார தாதியரின் காரியாலயம் போன்றன காணப்படுகின்றன.
இவற்றில் பொது சுகாதார தாதியரின் காரியாலயம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் தோட்ட மருத்துவ உதவியாளரின் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
நிலமையை வழமைக்கு கொண்டு வர தோட்ட முகாமைத்துவம் உட்பட கம்பளை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதும் மலையகத்தில் இடையிடையே நாளுக்கு நாள் பாரிய மழை வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
கொச்சிக்கடை விபத்தில் இரு இளைஞர்கள் பலி
நீர்கொ(ழும்பு கொச்சிக்கடை மடம்பெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். வெலேகடையில் இருந்து கடவலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் இவர்கள் பயணித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் அது வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றில் மோதியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
அகரகம மடம்பெல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 மற்றும் 18 வயதான இளைஞர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனனர். மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளது என கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlo4.html

கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மண் அகழ்வு! தடுக்குமாறு வடமாகாண அமைச்சரிடம் மக்கள் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 02:48.41 AM GMT ]
கிளிநொச்சி பன்னங்கண்டிக் கிராமத்தின் எல்லையிலுள்ள கனகராயன் ஆற்றுப் படுக்கையில் சட்டவிரோத மண் அகழ்வு தற்போதும் தொடர்வதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த பொறுப்பு வாய்ந்த எவருமே முன்வரவில்லை என அந்தக் கிராம மக்களும் கிராம அபிவிருத்திச் சங்கமும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்து நிறுத்த வடக்கு மாகாண சபையின் உரிய பொறுப்பு வாய்ந்த அமைச்சர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பன்னங்கண்டிக் கிராமத்தின் எல்லையிலுள்ள கனகராயன் ஆற்றுப்படுக்கையில் தினமும் சட்டவிரோதமாக மணல் மண் களவாக அகழ்ந்தெடுக்கப்பட்டு பல உழவு இயந்திரங்கள் மூலமாக ஏற்றிச் செல்லப்படுவதாகவும் இதனால் மக்கள் வசிப்பிடம், வயல் நிலங்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. 
அதுமட்டுமின்றி அப்பகுதியிலுள்ள பாரிய பயன்தரு மரங்கள் சரிந்து விழுந்து வீணாகப் போவதாகவும் இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அபபகுதி மக்கள் சுட்டிக் கட்டியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும் இதுவரை பொறுப்பான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.
இவ்விடயத்தில் சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய வடமாகாண அமைச்சர் உடனடியாகக் கவனம் செலுத்தி விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து உதவவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlo2.html

Geen opmerkingen:

Een reactie posten