தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 19 november 2014

இலங்கையில் மிகப் பிரபலமான ஹோட்டல் ஊழியர் மரணம்!

உலக மலசலகூட தினத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!- அநுரகுமார கிண்டல்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 06:16.35 AM GMT ]
உலக மலசலகூட தினமாக அறிவிக்கப்ப்ட்டுள்ள இன்றைய நவம்பர் 19ம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியின்போதே அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச நாட்டை நாறடிக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip2.html

இலங்கையில் மிகப் பிரபலமான ஹோட்டல் ஊழியர் மரணம்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 07:43.58 AM GMT ]
உலகில் மிகப் பிரபலமான ஹொட்டல் ஊழியரான கோல் பேஸ் ஹோட்டலின் நுழைவாயில் காப்பாளராக பணியாற்றி வந்த கொட்டாரப்பட்டு சட்டு என்று அழைக்கப்படும் குட்டன் தனது 72வது வயதில் நேற்று காலமானார்.
1920 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்த குட்டன், இளமை காலத்திலேயே தலைமன்னாருக்கு வந்தார்.
1938 ஆம் ஆண்டு கொழும்பு வந்த அவர் கோல் பேஸ் ஹோட்டலில் உபசரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அதற்கு முன்னர் கொழும்பில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் சேவையாற்றியுள்ளார்.
உதவியாளராக ஹோட்டலில் பணிக்கு சேர்ந்த அவர், பின்னர் சமையல் அறை ஊழியராக பிரபலம் பெற்றிருந்தார்.
இதன் பின்னர் நுழைவாயில் காப்பாளராக நியமிக்கப்பட்ட அவர் கடந்த 72 ஆண்டுகளாக அந்த பணியில் நீடித்தார்.
94 வயதான குட்டன் உலகில் ஹோட்டல்களில் பணியாற்றும் வயதான ஊழியர் என்ற பெருமையை பெற்றவர்.
உலகில் ஒரே நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர் மற்றும் உலகில் பிரபலமான ஹோட்டல் ஊழியர் என்ற ரீதியிலும் புகழ்பெற்றிருந்தார்.
குட்டனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை வெளியிடுவோரும் வந்த சந்தித்துள்ளனர்.
கோல்  பேஸ் ஹோட்டலின் 150வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவரது இறுதி விருப்பமாக இருந்த போதிலும் அந்த கனவு நனவாகாமல் போனதாக ஹோட்டல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip6.html

Geen opmerkingen:

Een reactie posten