[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 07:02.59 AM GMT ]
அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், சில திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் எந்த அமைச்சுக்கு சொந்தம் என்பதை அறிந்துள்ள முடியாதிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விசேட திட்டங்கள் அமைச்சு உட்பட 10 அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரத்து 951 கோடி ரூபா நிதியை விட ஜனாதிபதியின் செலவுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு மாத்திரம் ஆயிரத்து 971 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவுக்கு கண்டிக்கு ஹெலிக்கொப்டரில் ஜனாதிபதி சென்றார்.
அங்கிருந்து வைபவம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்காக தனியார் காணி ஒன்றின் ஊடாக வீதி அமைக்கப்பட்டது.அதற்கான செலவு 55 லட்சம் ரூபா.
ஜனாதிபதி அந்த வீதியில் வந்த போதும் திரும்பி அதில் செல்லவில்லை.
காணி முன்பு இருந்தது போல் மீண்டும் செய்து தரப்படும் என குறித்த தனியார் காணி உரிமையாளரிடம் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதனபடி அந்த வீதி மூடப்பட்டது.
ஒருநாளுக்கு செய்த இந்த வீண்விரயம் பற்றி ஜனாதிபதி அறிந்திருக்கமாட்டார். எமது பிரதேசங்களில் இப்படியான வீண் விரய செலவுகள் செய்யப்படுகின்றன எனவும் அசோக அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip4.html
யாழில் முன்னாள் போராளியைக் காணவில்லையென முறைப்பாடு
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 07:05.00 AM GMT ]
யாழ். குருநகர் ஐந்து மாடிக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து அன்டன் ஜெயரோன் (வயது 31) என்பவரை கடந்த 17ஆம் திகதி முதல் காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
தனது கணவரைக் காணவில்லையென அவரது மனைவி நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
கடையொன்றுக்கு சென்று வருவதாக சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இவர், அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டவராகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip5.html
இலங்கையில் மிகப் பிரபலமான ஹோட்டல் ஊழியர் மரணம்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 07:43.58 AM GMT ]
1920 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்த குட்டன், இளமை காலத்திலேயே தலைமன்னாருக்கு வந்தார்.
1938 ஆம் ஆண்டு கொழும்பு வந்த அவர் கோல் போஸ் ஹோட்டலில் உபசரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அதற்கு முன்னர் கொழும்பில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் சேவையாற்றியுள்ளார்.
உதவியாளராக ஹோட்டலில் பணிக்கு சேர்ந்த அவர், பின்னர் சமையல் அறை ஊழியராக பிரபலம் பெற்றிருந்தார்.
இதன் பின்னர் நுழைவாயில் காப்பாளராக நியமிக்கப்பட்ட அவர் கடந்த 72 ஆண்டுகளாக அந்த பணியில் நீடித்தார்.
94 வயதான குட்டன் உலகில் ஹோட்டல்களில் பணியாற்றும் வயதான ஊழியர் என்ற பெருமையை பெற்றவர்.
உலகில் ஒரே நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர் மற்றும் உலகில் பிரபலமான ஹோட்டல் ஊழியர் என்ற ரீதியிலும் புகழ்பெற்றிருந்தார்.
குட்டனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை வெளியிடுவோரும் வந்த சந்தித்துள்ளனர்.
கோல் போஸ் ஹோட்டலின் 150வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவரது இறுதி விருப்பமாக இருந்த போதிலும் அந்த கனவு நனவாகாமல் போனதாக ஹோட்டல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip6.html
5 மீனவர்கள் விவகாரம்: இரண்டு நாட்களில் ராஜபக்ச முடிவு!
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 07:54.41 AM GMT ]
தமிழக மீனவர்கள் 5 பேர் விவகாரம் குறித்து இரண்டு நாட்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்ய இருப்பதாக, ஜனாதிபதி அலுவலக செய்தி தொடர்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோர் மீது போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றம் கடந்த 30ம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது.
இது குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய இலங்கை ஜனாதிபதி அலுவலக செய்தி தொடர்பாளர் மொஹான் சமரநாயக்க, மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றதாக இந்தியா தரப்பில் இன்று முறைப்படி எங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்றார்.
மேலும், ஐந்து தமிழக மீனவர்களின் நிலைமை குறித்து இரண்டு நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் மத்திய அரசு உச்சபட்ச கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip7.html
Geen opmerkingen:
Een reactie posten