zaterdag 15 november 2014

முன்னாள் போராளி மீதான கொலை வரும் தேர்தலின் அடாவடித் தனத்தை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது: பாஸ்கரா!



மட்டு. வைத்தியசாலையில் புற்று நோய்க்கான வைத்தியர் இருந்தும் போதிய உபகரணங்கள் இல்லை: பொன் செல்வராசா
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 01:48.25 PM GMT ]
இலங்கையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்துள்ளார்.

புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது. அதிலும் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய்க்கு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டாலும், அங்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. ஆகவே அதனையும் வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkp0.html
ஜனாதிபதியின் தோல்வியைத் தவிர்க்க பொதுபல சேனா, நாமல் கூட்டிணைவு
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:49.09 PM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியைத் தவிர்ப்பதற்கான கடைசி முயற்சியாக பொதுபல சேனாவுடன் நாமல் ராஜபக்ஷ இணைந்து கொண்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் நில் பலகாய மற்றும் பொதுபல சேனா அமைப்பு இணைந்து இது தொடர்பாக நாளை கொழும்பில் இளைஞர் மாநாடொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. குறித்த இளைஞர் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பொதுவாக பொதுபல சேனா அமைப்பு மாநாடொன்றை நடத்துவதாயின் ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே அது தொடர்பான பிரச்சார நடவடிக்கைகைளை முன்னெடுக்கும். எனினும் இந்த மாநாடு திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு தொடர்பான சுவரொட்டிகள் பாதுகாப்புத் தரப்பினர் மூலம் இன்று காலை தொடக்கம் நாட்டின் முக்கிய நகரங்கள் தோறும் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் மிகக் குறைவாக இருந்த போதிலும் அதன் இளைஞர்கள் பிரிவு சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது.
அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் கொள்கைகள் இலகுவாக எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
இந்த உத்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள ஜனாதிபதி தரப்பு தீர்மானித்துள்ளது. இதற்காக நில் பலகாயவின் இளைஞர்களுக்கு பொதுபல சேனாவின் பிரச்சார உத்திகள் கற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நாளை நடைபெறவுள்ள இளைஞர் மாநாட்டில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இதன் பின்னர் எதிர்வரும் நாட்களில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளின் தொடர்பில் புலிகளுடன் தொடர்புடையவர்கள், நாட்டை காட்டிக் கொடுத்தவர்கள் என்ற ரீதியிலும் சமூக வலைத்தளங்கள் ஊடான பிரச்சாரம் பரந்தளவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும் பொது பல சேனாவின் சுயரூபம் அறிந்த பின்னர் ஏராளமான இளைஞர்கள் அந்த அமைப்பை விட்டு விலகத் தொடங்கியுள்ளனர். அதன்காரணமாக ஜனாதிபதி தரப்பு எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே என்று சிங்கள ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkpz.html
முன்னாள் போராளி மீதான கொலை வரும் தேர்தலின் அடாவடித் தனத்தை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது: பாஸ்கரா
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:21.50 PM GMT ]
அண்மையில் மன்னாரில் முன்னாள் போராளியான கிருஷ்ணசாமி மீதான கொலைத் தாக்குதல் சரணடைந்து விடுதலையான முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்குவதுடன் வரப்போகும் தேர்தலில் நடக்கப் போகும் அடாவடித் தனங்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் அறிவிக்கப்பட்ட இந்த நேரத்தில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையும் மிகவும் போட்டியான சூழ்நிலையும் காணப்படுகின்ற இந்த நேரத்தில் வழமையான தேர்தல் காலங்களில் புலி முத்திரையும் புலிச் சாயம் பூசும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்ததாகவே இக்கொள்கையும் காணப்படுவதாக தெரிவித்தார்
இக்கொலை நடந்த நாள் முதல் இன்று வரை கொலையாளி கண்டுபிடிக்கப்படவும் இல்லை கொலைக்கான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை மேலும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் நடைபெற்ற இந்தக் கொலைக்கு இராணுவம் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வேளையில் அரசு இதைத் தட்டிக் கழித்துவிட முடியாது.
அரசு இக்கொலைக்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்து விடுதலையாகி மக்களுடன் மக்களாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்ற இவ்வேளையில் இக்கொலையானது முன்னாள் போராளிகளின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
அரசு உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு நீதி விசாரணை நடத்தி குற்றவாளி தண்டிக்க ஆவண செய்வதுடன் முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் புலிச்சாய முத்திரை குத்தாமலும் ஜனநாயக தேர்தலாக நடத்த ஆவண செய்வதற்கும் வழிவகுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஐயப்ப சுவாமி பக்தர்களின் சபரிமலைப் பயணத்திற்கு அரசு உரிய உதவிகளை வழங்க முன்வரவேண்டும்
ஜயப்ப சுவாமி பக்தர்கள் சபரிமலை பயணத்தின்போது ஒவ்வோர் வருடமும் பல அசௌகரியங்களையும் துன்பங்களையும் சந்தித்து வருகின்றனர்.
இம்முறையாவது ஜயப்ப சுவாமி பக்தர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்ய அரசு ஆவண செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் வீடமைப்பு நிலையியற் துறை தலைவருமான சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தொவிக்கையில்,
பக்தர்களின் பயண ஒழுங்கிற்கு அரசு விசேட விமான போக்குவரத்தையும் விசேட குறைந்த கட்டண ஒழுங்கு முறையையும் பக்தர்கள் பயணத்தின் போது ஏற்படும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்கான ஆக்க பூர்வமான திட்டத்தை ஜயப்ப சுவாமி தலைமை குருசுவாமிகளுடன் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயணத்திற்கான இலகு முறையை அரசியலுக்கு அப்பால் நடைமுறைப்படுத்த ஆவண செய்யவேண்டும் என்றார் பாஸ்க்கரா.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkpy.html

Geen opmerkingen:

Een reactie posten