zaterdag 15 november 2014

மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்தினருக்கும் வட மாகாண அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்களுக்கு விரிவுரை தடை
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 02:14.47 PM GMT ]
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேருக்கு மறு அறிவித்தல் வரை விரிவுரைகளில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 6 ஆம் திகதி போயா தினத்தில் இந்த பகிடிவதை சம்பவம் இடம்பெற்றதாக முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலேயே குறித்த மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் குறைந்தது 5 வருடங்களுக்கு பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkp1.html
சார்க் மாநாட்டுக்காக ஜனாதிபதி மகிந்த நேபாளம் பயணம்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 02:24.25 PM GMT ]
நேபாளத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 25ம் திகதி காத்மன்டுவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப்,  ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி அஸ்ரப் கானி, பங்களாதேஸ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் சேரிங் டப்காய், மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யேமன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
சார்க் மாநாட்டுக்கான அழைப்புக்களை நேபாள அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விடுக்கவுள்ளது.
இந்தநிலையில் சார்க் தலைவர்கள்,  ஹோட்டல் சோல்டீயில் தங்கவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkp2.html
பயங்கரவாதத்தை போன்று போதைவஸ்துக்காரர்களும் ஒழிக்கப்படுவர்!- கோத்தபாய
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 03:44.21 PM GMT ]
இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமையை போன்று போதைவஸ்தையும் தோற்கடிக்கப் போவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
அரசாங்கத்தின் போதைவஸ்து ஒழிப்பு முனைப்புக்களை அடுத்து இலங்கையில் செயற்பட்டு வந்த பல பாதாள உலக தலைவர்கள் திடீரென்று காணாமல் போயுள்ளனர்.
வெல சுதா,  கிம்புக்கலாகே குணே, தெல்பாலா,  ஐஸ் மஞ்சு போன்றவர்கள் தற்போது நாட்டில் இல்லை.
அவர்கள் நாட்டில் உள்ளார்களா? அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்களா? என்பது தெரியவில்லை என்று கோத்தபாய கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று போதைவஸ்தும் ஒழிக்கப்படும் என்று கோத்தபாய குறிப்பி;ட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkp4.html
வங்கிகளில் விட்டுச்சென்ற யாழ். மக்களின் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்கவும்! ஜனாதிபதியிடம் வடமாகாணசபை கோரிக்கை
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 04:10.23 PM GMT ]
யாழ்ப்பாண இடப்பெயர்வின் போது வங்கிகளில் இருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட நகைகள், பணங்கள், வங்கிக் கணக்குகளை உரியவர்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கு மாகாண சபை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
யாழ்.குடாநாட்டில் 1995ம், 1996ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இடப்பெயர்வுகளினால் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளிலிருந்து கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட பொது மக்களின் அடகு நகைகள், காப்பு பெட்டகங்கள், மற்றும் உறங்கு நிலை கணக்கு மீதிகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படவேண்டும். என வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 11வது அமர்வில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்மானத்தில் அண்மையில் கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளில் ஒரு பகுதியை மக்களிடம் மீள வழங்கியிருந்தார்.
இதேபோன்று யாழ்.குடாநாட்டில் 95ம், 96ம் ஆண்டு காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் வங்கிகளில், தமிழ் மக்கள் வைத்திருந்த அடகு நகைகள், காப்பு பெட்டகங்கள், கணக்கு மீதிகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு வழங்கவேண்டும்.
அதற்கான பகிரங்க அறிவித்தலை விடுத்து இயலாத பட்சத்தில் அத்தகைய நகைகளின் மொத்த பெறுமதியினை யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வடமாகாணசபையிடம் வழங்கவேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானமே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேலும் கூறியிருப்பதாவது, மேற்படி விடயத்தில் துரதிஷ்டசாலிகளான யாழ்.மக்களின் சொத்துக்களை வங்கிகள் தமதாக்கிக் கொள்வது நியாயமற்றதாகும்.
இந்த நகைகளை 95ம், 96ம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த வெளியேற்றத்திற்கு முன்னர் அடகு வைக்கப்பட்டவையாகும்.
எனவே நகைகளையும், உறங்குநிலை கணக்கு மீதிகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கவேண்டும். அல்லது அதற்குரிய நிதியை மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடிய வடக்கு மாகாணசபைக்கு வழங்கவேண்டும். என கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkp5.html

மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்தினருக்கும் வட மாகாண அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 04:10.58 PM GMT ]
மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்தினருக்கும் வடமாகாண மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு மன்னாரிலுள்ள உப அமைச்சு அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
பண்டிகைக் காலத்தில் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற வியாபாரிகளால் தொடர்ந்து மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதை கருத்திற் கொண்டு இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இது தொடர்பில் வர்த்தகர்களும் அமைச்சரும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அடுத்தாண்டின் ஆரம்பத்தில் மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்துக்கு ஒரு நிலையான கட்டிடம் அமைப்பதற்கான நிதியினை ஒதுக்கித் தருவதாகவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

மன்னாரில் குடும்பமொன்றுக்கு வீட்டு மின் இணைப்பை செய்வதற்கான பொருட்கள் கையளிப்பு
மன்னார் பணங்கட்டுக்கொட்டில் வசித்துவரும் ஒரு குடும்பத்தினருக்கு வீட்டு மின் இணைப்பை செய்வதற்கான பொருட்களை, வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கி வைத்தார்.
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து இந்த பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
மன்னாரிலுள்ள தனது உப அலுவலகத்தில் வைத்து பொருட்களை வழங்கி வைத்தார்.

http://www.tamilwin.com/show-RUmszBSZKYkp6.html

Geen opmerkingen:

Een reactie posten