dinsdag 11 november 2014

நான் என்ன சொன்னாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார் : சுப்பிரமணியசாமி அடாவடி அடங்கவில்லை !

மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ITN ஊழியர்களுக்கு லஞ்சம் !

[ Nov 11, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 2045 ]
தேர்தலை இலக்காகக் கொண்டு சுயாதீன தொலைக்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராபக்ஸவிற்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ள அதன் ஊழியர்களுக்கு பாரிய தொகை போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுயாதீன தொலைக்காட்சி ஊழியர்களுக்கு தலா 1 லட்சம் ரூபா போனஸ் வழங்க அதன் தலைவர் முன்வைத்த யோசனைக்கு ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் அனுமதி அளித்துள்ளார். அதன்படி டிசம்பவம் மாதம் முதல் வாரம் ஊழியர்கள் கையில் பணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
ஆனால் தேசிய தொலைக்காட்சி ஊழியர்களுக்கு அவ்வாறு போனஸ் வழங்கப்படவில்லை என்பதோடு நிதி நெருக்கடி காரணமாக அதன் ஊழியர்களுக்கான நவம்பர் மாத சம்பளமும் ஒருவாரகாலம்
தாமதித்தே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேசிய தொலைக்காட்சி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். திறமையற்ற தலைவர் விமல் ரூபசிங்க, திறமையற்ற பணிப்பாளர் சந்திரபால லியனகே ஆகியோரின் நிர்வாகத்தின் கீழுள்ள தேசிய தொலைக்காட்சி நிறுவனம் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 30 மில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையல் பணிப்பாளருக்கு 16 மில்லியன் செலவில் ஜீப் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமைக்கு ஊழியர்கள எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1414.html

நான் என்ன சொன்னாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார் : சுப்பிரமணியசாமி அடாவடி அடங்கவில்லை !

[ Nov 11, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4640 ]
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று(10) நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக விழாவில், பா.ஜ.க. முக்கிய புள்ளியான சுப்பிரமணிய சாமி பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ’’மோடி அரசால் உங்களது திறமைகள் குறைத்து மதிப்பிடப்படுவதாக நீங்கள் கருதுகிறீர்களா?’’ என்ற கேட்டதற்கு, ‘’என்னைப் பார்த்தால் கவலையுடன் இருப்பதுபோல் உங்களுக்கு தெரிகின்றதா ? நான் நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். நேற்று கொல்கத்தாவில் இருந்தேன். இன்று பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கிறேன்.
பதவிக்கு ஏங்கிக் கொண்டிருப்பது வெள்ளையர்களின் மனநிலைக்கு ஒப்பானதாகும். இந்திய பிராமணர்களும், கல்வியாளர்களும் எந்தப் பதவியிலும் இருந்ததில்லை. ஆனால், அவர்கள் சொல்வதை ராஜாக்கள் செவிமடுத்து வந்துள்ளனர். எந்த விவகாரம் தொடர்பாக நான் என்ன சொன்னாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார். நான் இன்று அத்தகைய நல்ல நிலையில் இருக்கிறேன். என்னை மந்திரியாக்கி இருந்தால் ஒரேயொரு அமைச்சகத்தின் மீது மட்டுமே நான் அக்கறை செலுத்துவேன். இப்போதோ.., எல்லா அமைச்சரவைகளைப் பற்றியும் என்னால் பேச முடியும். எனக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்’’என்று கூறினார்.
இவர் கூறியது ராஜபக்ஷவையா இல்லை ராஜா என்று கூறுவது மோடியையா என்று தெரியாமல் சில ரிப்போட்டர்கள் தலையை பிய்த்துக்கொண்டார்களாம். 
http://www.athirvu.com/newsdetail/1415.html

Geen opmerkingen:

Een reactie posten