dinsdag 11 november 2014

மர்ம உறுப்பு வெட்டப்பட்ட மற்றும் அன் நபரின் தலையை இழுத்துச் சென்ற வான் கைப்பற்றப்பட்டது !

அலரிமாளிகைக்கு பறந்தது சட்ட அறிக்கை: உள்ளே உள்ள கடிதத்தில் என்ன உள்ளது என்று தெரியவில்லை !

[ Nov 11, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 3110 ]
நேற்றைய தினம்(திங்கள்) மாலை, அலரிமாளிகைக்கு உச்ச நீதிமன்றம் தனது சட்ட அறிக்கையை அனுப்பிவைத்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் மகிந்தர் போட்டியிடலாமா என்று மகிந்தரே உச்ச நீதிமன்றத்தை கோரியிருந்தார். அத்தோடு 10ம் திகதிக்கு முன்னதாக அறிக்கை சமர்பிக்குமாறு அவர் கூறியிருந்தார். இதனிடையே உச்ச நீதிமன்றின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்ட விளக்கம் கோரல் தொடர்பில் ஏனைய தரப்பினர் தங்களது கருத்துக்களை முன்வைக்க போதியளவு அவகாசம் வழங்கப்படவில்லை சட்டத்தரணிகள் சங்கம் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தது. வாய்மொழி மூலம் இது குறித்த தங்களது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்குமாறும், பதில்களை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரண தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு எதிர்தரப்பு விவாதத்தையும் உச்ச நீதிமன்றம் செவிமடுக்கவே இல்லை. எந்த விவாதப் பிரதிவாதங்களையும் இவர்கள் நடத்தவும் இல்லை. ஆனால் சட்ட ரீதியாக தாம் ஆராய்ந்துவிட்டதாக கூறி கடிதத்தை அலரி மாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1412.html

மர்ம உறுப்பு வெட்டப்பட்ட மற்றும் அன் நபரின் தலையை இழுத்துச் சென்ற வான் கைப்பற்றப்பட்டது !

[ Nov 11, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 6515 ]
நாவலப்பிட்டியில் மர்மமான முறையில் இறந்த ஆண்ணொருவரின் முண்டத்தை கம்பளை பக்கமாக சுமார் 17 கிலோமீற்றர் இழுத்துச்சென்றதாக சந்தேகிக்கப்படும் வானை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது யாவரும் அறிந்ததே. நகரில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவின்(CCTV) உதவியுடன் தான் அந்த வானை தாம் கைப்பற்றியதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
கம்பளை நகரில், தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தவரின் சடலம் கடந்த வியாழக்கிழமை 06ஆம் திகதி, கடுகண்ணாவை வீதியின் ஓரமாக கிடந்த நிலையில் மீட்கப்பட்டது. குறித்த சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இரத்தக் காயங்கள் இருந்ததுடன், மர்ம உறுப்பும் இல்லாமல் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.athirvu.com/newsdetail/1413.html

Geen opmerkingen:

Een reactie posten