[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 12:59.25 PM GMT ]
பத்திரிகையாளரான கருணாதாச சூரியாராச்சியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கம்பஹாவில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று சென்றிருந்த அமைச்சர் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அமைச்சர் பதவியில் இருந்து விலக போவதாக பரவி வரும் தகவல்கள் உண்மையுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சிறிசேன, வதந்திகள் பரவி வருகிறது என்று பதிலளித்தார்.
இறுதிச்சடங்கில் ஜனாதிபதியின் இரங்கல் செய்தியை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே வாசித்தார்.
மைத்திரிபால, பிரதமர் பதவிக்கு பரிந்துரை! எனினும் அவரின் முடிவு வெளியாகவில்லை!- ஆங்கில இதழ்
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சற்று முன்னர் பிரதமர் பதவிக்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பை கோடிட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவி குறித்து தமது நிலைப்பாட்டை வெளியிடவில்லை என்று தெரிவிக்;கப்பட்டுள்ளது.
மைத்திரிபால, கட்சிமாறப் போகிறார் என்ற வதந்திகளுக்கு மத்தியிலேயே பிரதமர் பதவி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அவரையே ஜனாதிபதி பொதுவேட்பாளராக நிறுத்துவது என்று எதிர்க்கட்சிகள் தீர்மானித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYir3.html
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 11:55.46 AM GMT ]
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை- இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் இலங்கைக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மீனவர் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி மகிந்தவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து, மீனவர்களின் பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
விடுவிக்கப்பட்ட மீனவர் 5 பேரும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மீனவர்களை தமிழகம் அழைத்துவர இந்திய வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்தவின் பொதுமன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுதலை
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் இலங்கையின் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும் இன்று பொதுமன்னிப்பின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட அவர்கள் ஐவரும் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் இவர்கள் ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டதாக இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர்கள் 2011ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களுக்கு கடந்த மாதம் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் இவர்கள் தொடர்பில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்தே ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் இவர்கள் ஐவரும் விடுவிக்கப்பட்டதாக மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எமர்சன், பி.அகஸ்டியஸ், கே.பிரசாத், ஆர். வில்சன் மற்றும் ஜே. லாங்லெட் ஆகியோரே விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களாவர்.
இவர்களின் விடுதலை தொடர்பில் தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYir1.html
Geen opmerkingen:
Een reactie posten