woensdag 19 november 2014

ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் ஒழித்துவிட்டு முடியரசு தோன்றியுள்ளது: மனோ கணேசன்

யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்போர் அங்கொடைக்கு அனுப்பவும் தகுதியற்றோர்: ஐ.தே.கட்சியின் பத்தேகம அமைப்பாளர்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 11:10.45 AM GMT ]
பொது வேட்பாளர் யானை  சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறும் நபர்கள் அங்கொடை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்புவதற்கும் தகுதியானவர்கள் அல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் பத்தேகம தொகுதி அமைப்பாளரான ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த லெனரோல் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார அரசாங்கத்தை விட பொது வேட்பாளர் அவசியம் என்ற பெரும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை புறந்தள்ளவிட்டு யானை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் எனக் கூறுவோர் அங்கொடை மனநோய் மருத்துவமனைக்கும் அனுப்ப தகுதியற்ற மனநோயாளிகள்.
இவர்களை விட சுய புத்தியை கொண்டவர்கள் அங்கு உள்ளனர். இலங்கை எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணிகள் மூலம் பலமிக்க அரசாங்கங்களை கவிழ்த்த வரலாற்றை கொண்ட நாடு.
ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க வெற்றிபெற முடியாத வேட்பாளரை யானை சின்னத்தில் மாத்திரம் போட்டியிடுமாறு முன்வைக்கப்படும் யோசனைகளானது அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் யோசனைகள் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொது வேட்பாளர் ஐக்கிய தேசிய  கட்சியின் யானை  சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியின் பிரதி  தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உட்பட அவரது சகாக்கள் சிலர் கோரி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq7.html
பொன்சேகா கட்சியை உடைத்தார் மஹிந்த: ஆளுங்கட்சிக்கு ஒரு அணி ஆதரவு
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 11:25.23 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரித்த வலைக்குள் வீழ்ந்த முக்கியஸ்தர்களை கொண்டு சரத்பொன்சேகா கட்சியை அரசாங்கம் இரண்டாக உடைத்துள்ளது.
சரத் பொன்சேகா கட்சியை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுடன் முற்றாக அழித்து விடவேண்டும் என்பதில் ஆளுங்கட்சி கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக அக்கட்சியின் முக்கியஸ்தர்களை ஆளுங்கட்சிக்கு இழுக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி நேரடியாக களமிறங்கியிருந்தார்.
எனினும் ஜனாதிபதி எதிர்பார்த்த பலன் கிடைக்காது போனாலும் சரத் பொன்சேகா கட்சியின் மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் அக்கட்சியை விட்டு விலகினர்.
மேலும் சில இரண்டாம் நிலை முக்கியஸ்தர்களும் கட்சியை விட்டு வெளியில் வந்துள்ளனர்.
இவ்வாறு கட்சியை விட்டு விலகி வந்துள்ளவர்களைக் கொண்டு புதிய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் புதுக்கட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆளுங்கட்சி பின்னணியில் இருந்து ஆதரவளிக்கின்றது.
மேலும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு கொழும்பு நகர மண்டபத்தில் கட்சி அலுவலகம் ஒன்றையும் ஆளுங்கட்சி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
இதற்குக் கைமாறாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதாக புதிய ஜனநாயக் கட்சி நேற்று அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiry.html
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதே எனது அமைச்சின் பொறுப்பு: மேர்வின் சில்வா
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 11:39.02 AM GMT ]
தாக்குதல் சம்பவம் ஒன்று காரணமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் மாலக்க சில்வா மீதான நீதிமன்ற வழக்கில் தான் தலையிட போவதில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு அதிகாரமிக்க அமைச்சராக இருந்தும் ஏன் அவரது மகனை சிறயைில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லை என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொது இடத்தில் இருந்து மதுபான நிலையம் ஒன்றை அகற்றுமாறு கோரி அமைச்சர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தியமை காரணமாக தனது மகனை விடுதலை செய்ய முடியவில்லையா என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மேர்வின் சில்வா, தான் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னரும் இப்படியான மதுபான சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது மகன் மீது எனக்கு அக்கறை உள்ளது. இந்த சம்பவம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது பற்றி அதிகம் கருத்து கூறவிரும்பவில்லை. அத்துடன் நீதிமன்ற விவகாரத்தில் தலையிடுவதில்லை.
பொது உறவுகள் அமைச்சர் என்ற வகையில் நான் ஒரு வீட்டில் உள்ள ஆண் அல்லது பெண்ணின் கள்ள தொடர்புகள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்கள் எனது அமைச்சின் கீழ் வருகிறது. நான் அந்த பிரச்சினை தீர்த்து வைப்பேன் என்றார்.
இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜை தாக்கிய குற்றச்சாட்டில் நீதிமன்றம் மாலக்க சில்வாவை நேற்று மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYirz.html
ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் ஒழித்துவிட்டு முடியரசு தோன்றியுள்ளது: மனோ கணேசன்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 11:47.43 AM GMT ]
அதிகாரபூர்வமாக நமது நாடு, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என அறியப்பட்டுள்ளது. இதில் இன்று எஞ்சி இருப்பது இலங்கை என்ற பெயர் மட்டும்தான். ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் ஒழித்துவிட்டு ஒரு முடியரசு இங்கே தோன்றியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், இந்நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை மீளமைத்து குடியரசை காப்பாற்றும் தேர்தலாகும்.
எனவே இந்த தேர்தல் கட்சி, நிறம், இனம், மதம் ஆகிய பேதங்களை கடந்த தேர்தலாக இருக்க வேண்டும். நாட்டை காப்பாற்ற ஒன்று சேரும் இந்த தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி, ஜேவிபி, ஜனநாயக கட்சி, ஹெல உறுமய ஆகிய கட்சிகளுடன் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரிவும் இடம்பெற வேண்டும்.
இவற்றுடன் இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நமது கட்சி உட்பட்ட அனைத்து கட்சிகளும் இடம்பெற வேண்டும்.
இந்த கூட்டு செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்து கொள்கிறேன்.
இதன்மூலம் இந்த சர்வாதிகார முடியரசு ஆட்சியை முதலில் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் பாராளுமன்றத்துக்கு வழங்குவோம். அதன்பிறகு நாம் பொது தேர்தலை தனித்தனி கட்சிகளாக சந்திப்போம்.
எங்கு போனாலும் உங்கள் பொது வேட்பாளர் யார் என கேட்கிறார்கள். இதன் காரணம் இந்த அரசாங்கம்தான். இன்று பொது வேட்பாளர் பற்றி எங்களைவிட அரசாங்கம்தான் அதிகம் கலவரமடைந்து பதட்டமடைந்துள்ளது.
அதனால்தான் எங்கே உங்கள் பொது வேட்பாளர் என்று எங்களிடம் கேட்கிறார்கள். நேற்று, இன்று, நாளை என நாம் நாள் கடத்துவதாக சொல்கிறார்கள்.
இது என்ன? பொது வேட்பாளரின் பெயரை அறிவிப்போம் என்று நாங்கள் எங்கே சொன்னோம்? இது அரசாங்கம் உருவாகியுள்ள கதை.
நாங்கள் பதட்டப்படவில்லை. நாம் மிகவும் சாவகாசமாக இதை அணுகுகிறோம். அவரசப்பட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. நீங்கள் முதலில் தேர்தல் தொடர்பான மற்றும் நியமனம் தொடர்பான அறிவித்தல்களை அதிகாரபூர்வமாக அறிவியுங்கள்.
அதன்பிறகு நாங்கள் எங்கள் பொது வேட்பாளரை அறிவிப்போம். எங்கள் வேட்பாளர் யார் என்பதை பற்றி அறிந்துகொண்டு, அந்த அடிப்படையில் தேர்தலுக்கு போவதா, இல்லையா என்று முடிவெடுக்க அரசு தடுமாறுவது எங்களுக்கு தெரியும்.
ஆகவே எங்கள் இரகசியம் எங்களுடன் உங்கள் அறிவிப்பு வரும் வரை இருக்கும். அதன்பிறகு நாட்டுக்கு தெரிய வரும்.
நாங்கள் பொது வேட்பாளர் பற்றிய விடயத்தை விட , பொது மேடை மற்றும் பொது எதிரணி கூட்டணி பற்றிய விடயத்துக்கே முன்னுரிமை கொடுத்து வந்தோம். அது இப்போது பலனளித்துள்ளது. அரசின் பிரதான பங்காளி கட்சியான ஹெல உறுமய, நேற்று நாட்டு தலைவருக்கு பிறந்த நாள் பரிசு வழங்கியுள்ளது.
அந்த பரிசின் மூலம் இன்றைய அரசில் உள்ளவர்கள் மத்தியில் உடை உடுத்தி தன்மானத்துடன் தெருவில் நடக்கும் தகைமை ஹெல உறுமய கட்சிகார்களுக்கு மட்டுமே உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த கட்சியுடன் எனக்கு கடுமையான முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், இன்று அவர்கள் தாம் ஊழல் பைல்களுக்கு பயப்படுபவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்கள் என்பதை கூற நான் தயங்கப்போவதில்லை.
ஏனென்றால் ஹெல உறுமய எம்பீக்கள் எவரும் மக்கள் பணத்தை திருடவில்லை. வாக்களித்த மக்களை காட்டிக் கொடுக்கவில்லை. அரசில் இருப்பதா இல்லையா என அவர்கள், ஒரு கட்சியாக கூட்டாக முடிவு செய்துள்ளார்கள்.
இன்னமும் நிறைய பரிசுகளை வழங்க பலர் வரிசையாக காத்திருக்கின்றார்கள். உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விசுவாசிகளுக்கு இங்கே இடம் தயாராக உள்ளது.
இன்று ஒரு முடியரசாக மாறியுள்ள இந்நாட்டை காப்பாற்றி, இந்நாட்டை மீண்டும் ஒரு குடியரசாக மாற்ற உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகாரர்கள் தயாராக இருக்கின்றார்கள். அவர்களும் பரிசளித்து விட்டு இங்கே வருவார்கள். பொறுத்திருங்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYir0.html

Geen opmerkingen:

Een reactie posten