தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 november 2014

தமிழ் பேசும் பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகளின் சேவை பிரச்சினைக்குரியது: வாசுதேவ நாணயக்கார!

அமைச்சர் மைத்திரிபாலவினால் ஜனாதிபதிக்கு இடைஞ்சல் ஏற்படுமா?: ஜனாதிபதி அச்சம்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 06:04.22 AM GMT ]
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருக்கும் ஜனாதிபதி அதை தற்போது ஏற்க மறுத்துள்ள அமைச்சர் மைதிரிபால சிறிசேன சில வேளைகளில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இடைஞ்சலை ஏற்படுத்தக்கூடும் என ஜனாதிபதி அச்சம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர் மங்கள சமரவீரவை ஆளும் கட்சிக்குள் கவர எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மைத்திரி மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தள செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வேளை அமைச்சர் சிறிசேனவை கட்சியின் முக்கிய அமைச்சர்கள் ரகசியமாக அவருடைய இல்லத்திற்கு சென்று 2 மணித்தியாலங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் கட்சியின் நலனுக்காக தொடர்ந்து சேவையாற்றுமாறு கோரியதாகவும் தெரியவருகின்றது.
அமைச்சர் மைத்திரிபாலவிடம் கெஞ்சும் மகிந்த ராஜபக்ஷ
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட போவதாக அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு தனது தேர்தல் பிரசார செயற்பாடுகளில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தெரியவருகிறது.
எனினும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் இந்த கோரிக்கைக்கு சரியான பதில் எதனையும் வழங்கவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அலரி மாளிகையில் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பொது வேட்பாளர் தொடர்பான பொறுப்பை கட்சி ஏற்பதாகவும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே இன்று முற்பகல் நாடு திரும்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாளைய தினம் கட்சியின் செயற்குழுவை கூட்டுமாறு பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் பொது வேட்பாளர் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYivy.html

மலையகத்தில் பாடசாலை சீருடைகள் வழங்குவதற்கு நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 06:02.29 AM GMT ]
கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பாடசாலை சீருடை வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சீருடைகள் வழங்கும் நடவடிக்கை பாடசாலை விடுமுறைக்கு முன்பு கொடுத்து முடிக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அட்டன் கல்வி வலயத்திற்கு சேர்ந்த 140 பாடசாலைகளுக்கு பாடசாலை சீருடை வழங்கும் நடவடிக்கை தற்போது அட்டன் பொஸ்கோ கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சீருடைகளை அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையின் அதிபர்கள் பொஸ்கோ கல்லூரிக்கு வருகை தந்து சீருடைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiu7.html

தமிழ் பேசும் பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகளின் சேவை பிரச்சினைக்குரியது: வாசுதேவ நாணயக்கார
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 05:42.27 AM GMT ]
தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகள் சேவையாற்றுவது பாரிய பிரச்சினை என தேசிய மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மொழிகளை கற்றுக்கொள்ள மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொழிச்சங்கங்கள் கோரிக்கை விடுத்தால், நாம் அதற்கான ஆலோசனைகளை வழங்க முடியும்.
மொழிகளை அறிந்த அதிகாரிகளை பணிகளின் போது குறைவாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இது குறித்து சேவை வழங்கும் நிறுவனங்கள் போதிய அக்கறை காட்டுவதில்லை.
தமது மொழியில் சேவையை வழங்குமாறு கோரினாலும் அதனை செய்யாதிருக்கவும் வாய்ப்புள்ளது. இரு மொழிகளை பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே இந்த பிரச்சினை எதிர்நோக்கப்படுகிறது என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiu6.html

Geen opmerkingen:

Een reactie posten