zondag 16 november 2014

இலங்கை முன்னேறிய நாடு: சரத் அமுனுகம!



வெளிநாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு விஜயம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 05:32.45 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனத்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி  திட்டங்களைப் பார்வையிடுவதற்கு வெளிநாட்டு செஞ்சிலுவை  குழு ஒன்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது.
இந்த குழுவினர் மட்டு மாவட்டத்தின் தற்போதைய நிலை பற்றி இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு  கிளை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
அத்துடன் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு  சென்று அதன் தற்போதைய நிலை பற்றி வைத்தியசாலை நிருவாகத்தினரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
காத்தான்குடி தள வைத்தியசாலை நோர்வே செஞ்சிலுவை  சங்கத்தினால் 600 மில்லியன் ரூபாய் செலவில் நிருமானிக்கப்பட்டதாகும்.
சுனாமி தாக்கத்தினால் பாதிப்புற்ற மக்களுக்காக வெளிநாட்டு செஞ்சிலுவை சங்கங்கள் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை, பெரியகல்லாறு வைத்தியசாலை, ஒந்தாச்சிமடம் 116 வீட்டுத்திட்டம், வாகரை வீட்டுத்திடம், நாசிவன்தீவு வீட்டுத்திட்டம், போன்ற பல பாரிய அபிவிருத்தி ப ணிகளை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நோர்வே, ஒஸ்றியா, கொங்கொங், ஐஸ்றின், ஆகிய ஆகிய நாடுகளைச் சேர்ந்த செஞ்சிலுவை சங்கங்களிலிருந்து 6 பேர் கொண்ட குழுவே வந்துள்ளது.
இவர்கள் மட்டக்களப்பில் ஒரு வாரகாலம் தாங்கியிருந்து மேற்படி செஞ்சிலுவை அமைப்புக்களால் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி  திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயவுள்ளதாக இலங்கை  செஞ்சிலுவை  சங்கத்தின் மட்டக்களப்பு  கிளை நிறைவேற்று அதிகாரி வே.பிறேகுமார் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYks2.html
யாழில் 81 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 06:00.19 AM GMT ]
யாழில் 81 கிலோ கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாளை பொலிஸார் தெரிவித்தனர்.
இளவாளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் யாழ். கச்சேரி வீதி மற்றும் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் இளவாளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
http://www.tamilwin.com/show-RUmszBSaKYks3.html
இலங்கை முன்னேறிய நாடு: சரத் அமுனுகம
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 06:18.56 AM GMT ]
அபிவிருத்தியை பொருத்தவரை உலக நாடுகளில் இலங்கை முன்னேற்றமடைந்த நாடாக மாறியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதியமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதார மாநாட்டின கீழ் நடைபெற்ற விவாதத்துடன் கூடிய கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிறப்பு வீதம் தாய் மரணம் வீதம் ஆயுட்காலம் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது இலங்கை உலகில் முன்னேற்றிய நாடுகளை போன்ற நிலைமையில் உள்ளது.
இந்தியா டுடே சஞ்சிகையின் ஆசிரியர் சபை ஆலோசகர் ஷிகர் குப்தா வழி நடத்திய இந்த விவாத ரீதியான கலந்துரையாடலில் வர்த்தகர்களான சஞ்சிவ் மேத்தா, ஆதி கோத்ரேஜ் பிரபல நடிகை காஜல் தேவ்கன் மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYks4.html

Geen opmerkingen:

Een reactie posten