[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 09:27.56 AM GMT ]
இன்று காலை லுணுகல பிரதேசத்தில் கடுமையான மழை பெய்துள்ளது. மழையுடன் மாணிக்கக் கற்கள் விழுந்ததாக நினைத்து மக்கள் சில பொருட்களை பொறுக்கியுள்ளனர்.
லுணுகல நகரிலிருந்து வெல்லவாய பிரதேசம் நோக்கிச் செல்லும் நான்கு கிலோ மீற்றர் துர பாதையில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மாணிக்கக் கற்களை பொறுக்கி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் பயணம் செய்த லொறியொன்றிலிருந்து விழுந்த பாசான் வகைகளையே மக்கள் இவ்வாறு மாணிக்கக் கல் என நினைத்துள்ளனர்.
கோமேத மற்றும் ரபாஸ் என்னும் இரண்டு வகை பாசான் வகைகளே மக்களினால் இவ்வாறு பொறுக்கப்பட்டுள்ளது.
மாணிக்ககல் என எண்ணி வீதியை இடைமறித்த மக்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjv4.html
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான வேட்பாளருக்கே ஆதரவளிக்கப்படும்: சரத் பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 10:39.39 AM GMT ]
பொது வேட்பாளரை நிறுத்தும் போது சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பிரதான அரசியல் கட்சியொன்றின் வலுவான வேட்பாளரே பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.
வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும் நபர்களை தேர்தலில் போட்டியிடச் செய்வதில் பயனில்லை. வலுவான ஓர் வேட்பாளருக்கு எனது ஆதரவு வழங்கப்படும்.
முக்கியமான அரசியல் கட்சியொன்றிலிருந்து வேட்பாளர் ஒருவரை நியமித்தால் அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளின் அடிப்படையில் ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி தலைமைக்காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjv5.html
கொஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி!
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 09:13.08 AM GMT ]
கொஸ்கமை சந்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளிலில் சென்ற இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjv3.html
Geen opmerkingen:
Een reactie posten