தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 18 november 2014

தேர்தலுக்காக கூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பேச்சு நடத்தமாட்டோம்!– அமைச்சர் நிமல் சிறிபால!

திகாம்பரத்துக்கும் செந்தில் தொண்டமானுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 07:07.39 AM GMT ]
கொட்டக்கலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றில் ஆஜரான மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.உதயகுமார் மற்றும் மத்திய மாகாண அமைச்சர் ராம் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டக்கலை, கினிகத்தேனை பிரதேசத்தில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளின் தலைவர் உட்பட உறுப்பினா்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்த் தகராறு குறித்து ஹட்டன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி வழக்கின் பிரதிவாதிகளான ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபை அமைச்சர் ராம், மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமாரும் மாகாண அமைச்சர் ராமும் இன்று நீதிமன்றில் ஆஜரான நிலையில் அவர்களை தலா 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 50,000 ரூபா சரீரப் பிணையிலும் விடுவித்து ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவான் அமில ஆரியசேன உத்தரவிட்டார்.
மேலும் பிரதி அமைச்சர் திகாம்பரம் மற்றும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBScKYju7.html

ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மலையகத்தில் ஐந்து புதிய பாலங்கள்!
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 08:08.49 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 5 பகுதிகளில் புதிதாக ஐந்து இரும்பு பாலங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் வழிக்காட்டலின் ஊடாக கிராமிய பாலங்களை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 4 மில்லியன் ரூபா நிதியில் ஒதுக்கீட்டில் இந்தப் பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
கினிகத்தேனை அம்பகமுவ ரத்துபாலாம, கினிகத்தேனை தெய்கஸ்தென்ன, வட்டவளை டெம்பள்ஸ்டோவ், டிக்கோயா பட்டல்கலை, நோர்வூட் பீரட் ஆகிய பிரதேசங்களில் இந்த புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
அந்த பகுதியில் தற்போது காணப்படும் பாலங்கள் சேதமடைந்து இருப்பதனால் பொது மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் இந்த புதிய பாலங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட்டவளை டெம்பள்ஸ்டோவ் பகுதியின் பாலத்திற்கான அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
இந்த பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுக்கோளின் படி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjv0.html
மகிந்தவுக்கு ஹெல உறுமய கொடுத்த பிறந்தநாள் பரிசு
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 08:16.08 AM GMT ]
அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளிலிருந்து விலகுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்தமையானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுக்கப்பட்ட பிறந்தநாள் பரிசாகும் என அக்கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்தார்
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சு பதவிகளிலிருந்து தானும் உதய கம்மன்பிலவும் விலகவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று அறிவித்துள்ளார்.
ஹெல உறுமயவின் இந்த தீர்மானமானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுக்கப்பட்ட பிறந்தநாள் பரிசாகும் என்று, ஒமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதி செய்தல், ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 35 அம்சங்கள் அடங்கிய கோரிக்கையை அரசாங்கத்திடம் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த போதிலும், அவற்றை நிறைவேற்றும் முடிவில் அரசாங்கம் இல்லை எனத் தெளிவாகிறது என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் செயற்குழு கூட்டத்தின் போது, சுமார் 4 மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjv1.html
தேர்தலுக்காக கூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பேச்சு நடத்தமாட்டோம்!– அமைச்சர் நிமல் சிறிபால
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 08:34.10 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுடன் அரசாங்கமோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ எதுவிதப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தாது என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இது தொடர்பாக உரையாற்றும் போது,
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூட, கூறியுள்ளார்.
தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதை விட வேறுவழி ஏதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும். அங்கு தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கலாம்.
இந்தக் கருத்தை நாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த போது அவரது கருத்தும் அதுவாகவே இருந்தது.
நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அதேவேளை, அடுத்த ஆண்டு வன்முறையற்ற வழியில் போராட்டம் நடத்தப் போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு, ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்துவதற்கு கூட்டமைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளா
http://www.tamilwin.com/show-RUmszBScKYjv2.html

Geen opmerkingen:

Een reactie posten