maandag 17 november 2014

இலங்கையின் உள்விவகாரங்களில் எந்த விதத்திலும் தலையிடுவதில்லை: பா.ஜ.க!

விபத்துக்களால் கடந்த 10 மாதங்களில் 1972 பேர் பலி
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:00.18 PM GMT ]
2014 ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலத்தில் கோர விபத்துக்கள் காரணமாக ஆயிரத்து 972 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஆயிரத்து 275 பேர் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், பஸ் மற்றும் லொறி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான விபத்துக்களை தடுக்க சிறிய ரக வாகனங்களின் அளவு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வதை தவிர்க்குமாறு பொலிஸ் போக்குவரத்து பிரிவு சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjr2.html
வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவு
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:17.29 PM GMT ]
கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் நடத்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் வாஸ் குணவர்தன உட்பட சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு தாமதமாக அழைத்து வரப்பட்டமை தொடர்பில் நீதிபதிகள் சிறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஷியாம் கொலை தொடர்பாக வாஸ் குணவர்தன உட்பட 6 சந்தேக நபர்களுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjr3.html
மஹிந்த தற்போதே லஞ்சம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்: ஐ.தே.க. - பேஸ்புக் மூலம் ரணிலிடம் கேள்வி கேட்கலாம்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:27.17 PM GMT ]
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு லஞ்சம் வழங்க ஆரம்பித்து விட்டதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜெயசூரிய இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதன் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதே அலரி மாளிகையில் தானம் வழங்கும் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களை இலகுவில் இந்தமுறை வெல்ல முடியாது. எனவே உணவும் பாணமும் கொடுக்க வேண்டும் என்ற கட்டத்துக்கு அரசாங்கம் வந்துவிட்டது.
திறைசேரியில் நிதியில்லாத போதும் அரசாங்கம் அண்மையில் கட்சியின் உள்ளுராட்சி அங்கத்தவர்களுக்கு 2912 மோட்டார் சைக்கிள்களை வழங்கியது. மோட்டார் சைக்கிள்களை வழங்கி ஆதரவாளர்களை தன்னகப்படுத்திக்கொள்ள அரசாங்கம் முனைந்தாலும் பலர் அதனை பெற்றுக்கொண்டு அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளதாக கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் ரணிலிடம் கேள்வி கேட்கலாம் – ஐ.தே.கட்சியின் ஊடகப் பிரிவு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியாக கேள்விகளை கேட்கும் வேலைத்திட்டம் ஒன்று பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டோக் டு ரணில் என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்விகளையும் அவரது பதில்களையும் நாட்டின் எதிர்காலம் சம்பந்தமான அவரது வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத நல்லிணக்கம் தொடர்பில் டோக் டு ரணில் ஊடாக எழுப்பபட்டிருந்த கேள்விகளுக்கு ரணில் ஏற்கனவே பதிலளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjr4.html
இலங்கையின் உள்விவகாரங்களில் எந்த விதத்திலும் தலையிடுவதில்லை: பா.ஜ.க
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:30.02 PM GMT ]
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எந்த விதத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளாது என அந்நாடு தெரிவித்துள்ளது.
பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பில் சுதந்திரமான தீர்மானங்களை எடுக்கும் உரிமையை இந்தியா மதிப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளரான எம்.எஸ்.அக்பர் கூறியுள்ளார்.
இந்தியாவின் புதிய பிரதமரான மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டதன் மூலம் இலங்கை சம்பந்தமாக நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு எப்படியான நல்லெண்ணத்தை கொண்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளதாகவும் அக்பர் கூறியுள்ளார்.
இலங்கை சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருவது தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அக்பர், உலகில் எந்த நாடும் ஒரு நாட்டுடன் மாத்திரம் தொடர்புகளை வைத்து கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு உதவும் நாபடுகள் சம்பந்தமான இந்தியாவின் கொள்கை வேறுவிதமாக இருக்கும்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நல்லெண்ணத்தை வளர்ப்பதன் மூலம் இரு நாடுகளின் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் எனவும் அக்பர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjr5.html

Geen opmerkingen:

Een reactie posten