donderdag 20 november 2014

வடக்கு – கிழக்கில் 463 விகாரைகள்! சபையில் யோகேஸ்­வரன் எம்.பி. அதி­ருப்தி!



வடக்கு - கிழக்கில் திட்டமிடப்பட்டு 463 பெளத்த விகாரைகள் நிறு­வப்­பட்­டி­ருப்­ப­தாக தமிழ்த் ­தே­சி­யக கூட்­ட­மைப்பு எம்.பி. சீனித்­தம்பி யோகேஸ்­வரன் நேற்று பாராளுமன்றத்தில் அதி­ருப்தி வெளி­யிட்டார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற 2015ம் ஆண்­டுக்­கான வரவு - செலவுத் திட்­டத்தின் தெரி­வுக்­கு­ழு­வுக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறு­கையில்;
இலங்­கையில் கடைப்­பி­டிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்ற இந்து - கிறிஸ்­தவம், இஸ்லாம் மற்றும் பெளத்தம் ஆகிய நான்கு மதங்­க­ளுக்கும் பொது­வா­ன­தாக பெளத்த விவ­கார அமைச்சு என்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.
பெளத்த விவ­கார அமைச்­சா­னது பெளத்த சம­யத்­துக்கே முன்­னு­ரிமை கொடுக்­கின்­றதே தவிர ஏனைய மதங்­களைப் பற்றி சிந்­திப்­ப­தாக இல்லை.
மத விவ­கா­ரங்­க­ளுக்­கென ஒதுக்­கப்­ப­டு­கின்ற நிதி­யா­னது 99 வீதம் பெளத்த மதத்­துக்­கான விவ­கா­ரங்­க­ளுக்கும் எஞ்­சி­யி­ருக்கும் ஒரு­வீத நிதியே இந்து - கிறிஸ்­தவ மற்றும் இஸ்­லா­மிய மத விவ­கா­ரங்­க­ளுக்கும் என ஒதுக்­கப்­ப­டு­கி­றது.
புத்­த­பெ­ருமான் பிறப்பால் ஒரு இந்து. ஆகவே இந்து சம­யத்­துக்கும் பெளத்­தத்­திற்கும் நெருங்­கிய தொடர்­புகள் இருக்­கின்­றன என்­பதை இங்கு கூறி­வைக்க விரும்­பு­கிறேன்.
2012ம் ஆண்டு நாடு முழு­வதும் 10,349 விகா­ரைகள் இருந்­தன. அது 2013இல் 10.812ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அதி­க­ரிப்­பா­னது வடக்கு கிழக்­கி­லேயே இடம்­பெற்­றுள்­ளது. அந்த வகையில் வடக்கில் கடந்த வரு­டத்தில் 463 விகாரைகள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
யுத்தம் நிறை­வுக்கு வந்த 2009ம் ஆண்டின் பின்னர் இந்­துக்­களும் அச்­சு­றுத்­தப்­பட்­டு ­வ­ரு­கின்­றனர். அது­மாத்­தி­ர­மின்றி பூர்­வீகக் குடி­களின் மதத்தை அழிப்­ப­தற்கு திட்­ட­மிட்ட செயற்­பா­டுகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.
மட்­டக்­க­ளப்பில் பெளத்த பிக்கு ஒருவர் அச்­சு­றுத்­த­லாக இருந்­து­ வ­ரு­கிறார். பொலி­ஸார்­கூட அவர் மீது நட­வ­டிக்கை மேற்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.
பொது­ப­ல­சேனா என்ற அமைப்­பொன்று இங்கு இயங்­கி ­வ­ரு­கி­றது. இந்த அமைப்­புடன் தற்­போது சில இந்து சம­யத்தைச் சேர்ந்த அமைப்புக்களும் இணைந்து கொண்டுள்ளன.
இது இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இருந்து வருகிறது.
மேலும், இந்து ஆலயங்களில் மிருக பலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தடுக்கப்பட வேண்டும். ஆலயங்களில் மிருக பலிகளை தடுப்பதற்கு பெளத்த விவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiv0.html

Geen opmerkingen:

Een reactie posten