[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 11:18.37 PM GMT ]
கொலன்னாவை பிரதேசத்தில் இன்று மாலை ஜனாதிபதியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா இதனை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பசில்,
நேற்றுவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்பது சங்கீதக் கதிரை போன்று பலரைச் சுற்றிக் கொண்டிருந்தது. பலவந்தமாக உட்கார வைக்கப்பட முயன்ற போதிலும் பலர் அதிலிருந்து தவிர்ந்து கொண்டனர்.
ஏனெனில் அதனை ஏற்றுக் கொண்டால் பலியாடுகளாக நேரிடும் என்று அவர்களுக்குத் தெரியும்.
எனவே தான் யாரும் இல்லாத நிலையில் ஆளுங்கட்சியிலிருந்து ஒருவரை அழைத்துக் கொண்டு போய் அதில் உட்கார வைத்துள்ளார்கள்.
அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நாள் என்பன தெளிவாகத் தெரிந்த நிலையில் இந்த தேர்தல் அலுவலகம் திறக்கப்படுகின்றது.
ஆளுங்கட்சியை விட்டு விலகிப் போனவர்களுக்கு இன்னும் சந்தர்ப்பம் காத்திருக்கின்றது. அவர்கள் திரும்பி வந்தால் மீண்டும் எம்முடன் இணைந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgt6.html
மைத்திரியின் கோட்டைக்கு மஹிந்த விஜயம்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 11:31.53 PM GMT ]
சோமாவதி விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான விஜயம் என்ற போர்வையில் இந்த பயணம் நடைபெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இந்த விஜயத்தின் போது அவர் கதுருவெல அல்லது ஹிங்குராக்கொட நகரங்களில் பொதுமக்களை சந்தித்து உரையாடவும் திட்டமிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியின் விஜயத்தின் போது எதிர்க்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர். அவர்களுககு தலா பத்து இலட்சம் ரூபா வீதம் இன்றிரவுக்குள் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தற்போது பொலனறுவையில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் கமாண்டோக்கள் பெருமளவில் இரவோடு இரவாக குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
எனினும் கடைசி நேரம் வரை ஜனாதிபதியின் வருகையை இரகசியமாக வைத்திருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் மைத்திரிபாலவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgt7.html
1999ம் ஆண்டு தேர்தல் மோசடியானது!- எஸ்.பி திஸாநாயக்க
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 11:44.33 PM GMT ]
அப்போது தேர்தல் தொடர்பிலான பொறுப்புக்கள் எனக்கே வழங்கப்பட்டிருந்தது.
எனக்கு தெரியும் என்ன செய்தேன் என்று, அது நீதியான தேர்தலா இல்லை, ஊழல் மோசடிகள் நிறைந்தது. உயிரிழந்தவர்களின் வாக்குகள் போடப்பட்டன. ஊரில் இல்லாதர்களும் வாக்களித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் வாக்குச் சாவடிக்குள் வரவிடாது துரத்தினோம். வாக்குச் சாவடிகளில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி பிரதிநிதிகளை இருக்க விடவில்லை. நாங்கள் அடித்து துரத்தினோம்.
1999ம் ஆண்டில் வாக்கு கொள்ளை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு இல்லையென்றால் சந்திரிக்கா வெற்றியீட்ட முடியாது.
நல்ல முறையில் சேவையாற்றி தேர்தலை வெற்றியீட்டினோம் என சந்திரிக்கா கூறினார். அவ்வாறு நாங்கள் தேர்தலில் வெற்றியீட்டவில்லை.
என்னால் மோசடி செய்யப்பட்ட போலி வாக்குகள் 49 வீதமும், தற்கொலைத் தாக்குதலில் கண்ணுக்கு ஏற்பட்ட காயத்திற்கு 2 வீதமான வாக்குகளும் மொத்தமாக 51 வீத வாக்குகளை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என நான் சந்திரிக்காவிடம் கூறினேன் என எஸ்.பி. திஸாநாயக்க செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYguy.html
Geen opmerkingen:
Een reactie posten