[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 11:57.45 PM GMT ]
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பொது தீர்மானங்களுக்கு உடன்படாதவர்கள் அரசைவிட்டு வெளியேறிச் செல்லுமாறு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், நவீன் திஸாநாயக்க ஆகியோரைப் பார்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என சிங்கள, ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காலை இழுப்போரும், சர்வதேச சமூகத்திடம் கோள் சொல்பவர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை எனவும் இதன்போது ஜனாதிபதி மஹிந்த கூறினார் என்று தெரிவிக்கபப்டுகின்றது.
தாம் பதவி விலக்குவதற்கு முன்னதாக தாங்களாகவே அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்து கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாட்டில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தன்னைச் சந்திக்கும் சர்வதேச சமூகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அண்மையில் பெளத்த தீவிரவாத அமைப்பான பொதுபலசேனா அமைச்சர் ஹக்கீமை அரசிலிருந்து உடனடியாக ஜனாதிபதி வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHSdLcmx1.html
ஜனாதிபதி எனக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டார்!- பசில் ராஜபக்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:10.36 AM GMT ]
பிரதமர் பதவி எனக்கு கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது. அத்துடன் பிரதமர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் கிடையாது.
பிரதமர் பதவிக்கு நான் பொருத்தமானவனா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டியதில்லை.
அரசியல் சாசனத்திற்கு அமைய தனத விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பிரதமர் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்ய முடியும்.
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் கட்சியில் பிரச்சினைகள் குறைவடைந்துள்ளன.
18ம் திருத்தச் சட்டத்தின் ஊடாகவே அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேரகாணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULcmx2.html
ஐநா பிரதிநிதியும் எம்மை புறக்கணித்து விட்டார்: வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:20.06 AM GMT ] [ பி.பி.சி ]
ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணசபையின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் அரசாங்க தரப்பினர் முடக்கி வருகின்ற சூழ்நிலையில், ஐநா பிரதிநிதியும் தம்மை புறக்கணித்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன்விழாவையொட்டி சனிக்கிழமை இடம்பெற்ற மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
வடமாகாண சபைக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துச் செல்வதைக் குறித்துக்காட்டுவதாக அவருடைய இந்த உரை அமைந்திருக்கின்றது.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் மூலமாக தமது மாகாணசபை உறுப்பினர்கள் பதவிக்கு வந்துள்ள போதிலும், அந்தச் சட்டம் தோல்வியடைந்த சட்டமாகவே இருக்கின்றது என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
வடமாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் இராணுவ பின்புலத்தைக் கொண்டுள்ள வடமாகாண ஆளுனர் ஆகியோருக்குப் பதிலாகப் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் உறுதியத்திருந்த போதிலும், அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அவர் மீண்டும் இங்கு வலியுறுத்தி கூறியுள்ளார்.
இதன்போதே, ஐநா நிறுவனமும் கூட வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்பட்டிருப்பதாக அவர் அதிருப்தியோடு கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULcmx3.html
Geen opmerkingen:
Een reactie posten