zondag 20 juli 2014

20 வருடங்கள் தண்டனையா ? ஜாலியாக வாங்கிக்கொண்டு செல்லும் மகிந்தரின் நண்பர் !




பிரித்தானியப் பிரஜையான குராம் சேக்கின் கொலைக் குற்றவாளிகளான, தங்காலைப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதானபத்திரன உட்பட நால்வருக்கு கொழும்பு, மேல் நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை குராம் ஷேக்கின் சகோதரர் வரவேற்றுள்ளார். ஆனால் பின்னால் நடந்த விடையத்தை எவரும் கவனிக்கவில்லை. ஒரு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை பெற்ற கைதிபோல புஷ்ப விதானபத்திரன இருக்கே இல்லை. செம ஜாலியாக ஜீப்பில் ஏறி கையைக் காட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இது அவரை அதிரவைக்கவும் இல்லை. என்ன தான் நடந்துள்ளது ?
வெளிநாட்டு பிரஜை ஒருவரை கொடூரமாக தாக்கி கொலைசெய்துள்ளார். மேலும் பெண்ணை சம்பவ இடத்திலேயே கற்பழித்தும் உள்ளார். இந்த இரண்டு குற்றச்செயல்களும் நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஆயுள் தண்டனையோ இல்லை தூக்கு தண்டனையோ வழங்கப்படாது அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன் நாள் பிரதேச சபைத் தலைவரான, புஷ்ப விதானபத்திரன மகிந்தரின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை தொடர்பாக எந்த அதிர்சியும் வெளிக்காட்டாமல் அப்படியே பொலிசாருடன் செம் ஜாலியாக ஏறிச் செல்ல என்ன பின் புலம் உள்ளது என தற்போது உங்களுக்கு விளங்கி இருக்கும்.
இவருக்கு சிறையில் ராஜபோக வாழ்க்கை காத்திருக்கிறது. அத்தோடு பரோலில் வெளியே செல்லமுடியும். வருடத்தில் இவ்வாறு எத்தனை நாள் அவர் வெளியே இருப்பார் என்று எவராலும் சொல்ல முடியாது. அத்தோடு பண்டிகை தினங்களை முன்னிட்டு ஜனாதிபதியால் வழங்கப்படும் பொது மன்னிப்பும் இவருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நன் நடத்தை அது இது என்று காரணம் காட்டி, ஒரு 5 வருடத்தில் இவர் விடுதலையாகிவிடுவார் என்று கொழும்பில் உள்ள விடையம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் வெறும் சந்தேகம் என்ற போர்வையில் தமிழர்களை பிடித்து விசாரணைகள் எதுவும் இன்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கிறார்கள். இது குறித்து யார் பேசுவது ?


Geen opmerkingen:

Een reactie posten