[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 07:54.12 AM GMT ]
திட்டமிட்ட குற்றச் செயல் மற்றும் மோசடி தடுப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்ட தேடுலின் போது இந்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
மலேசியாவில் தொழில் வாய்ப்பு என நம்பி உள்நாட்டு முகவரொருவரால் அழைத்து செல்லப்பட்டு நிர்க்கதியாகியுள்ள மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச வாசிகளின் உறவினர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் நேரடியாக தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து சந்தேக நபர், தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இரண்டு கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருப்பது மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றச் செயல் என்பது குறிப்பிடதக்கது.
மலேசியாவில் நிர்க்கதியாக உள்ளவர்களை அழைத்து வர பணியகத்தில் உறவினர்கள் முறைப்பாடு!
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 06:45.29 AM GMT ]
மட்டக்களப்பு மாவடட்டம் வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள சுரவனையடியூற்று கிராமத்தை சேர்ந்த துரைராஜா நீர்முகராசா (வயது 33), யோகராசா சசிக்குமாரன் (வயது 30), சிவராசா தர்மராசா (வயது 33), குகாலிங்கம் சந்திரசேகரம் (வயது 23), கங்காதரன் திருக்குமார் (வயது 37), சந்திரசேகரம் திருக்கணேஸ் (வயது 30) ஆகிய குறித்த ஆறு பேரையும் நாட்டிற்கு திருப்பி அழைத்து வர ஏற்பாடு செய்து தருமாறு கோரி விபரங்களையும் சம்பித்துள்ளனர்.
ஒரிரு மாதங்களுக்கு முன்னர் குருநாகலையை சேர்ந்த முகவரொருவரால் தொழில் வாய்ப்புக்காக மலேசியாவிற்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் மலேசியாவிலுள்ள கும்பலொன்றிடம் ஒப்படைக்கப்பட்டு; துன்புறுத்தப்படுவதாவும் குற்றச்செயல்கள் போன்ற வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முற்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் உறவினர்கள் புகார் செய்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten