[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 02:59.12 PM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது, வெற்றியை பெற்றுக் கொள்வதற்காக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொள்ளைகள் தொடர்பாக கட்சியின் தலைவருக்கும், செயற்குழுவிற்கு அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்டக்குழுவின் தலைவராக காமினி ஜயவிக்ரம பெரேரா, பொதுச் செயலாளராக திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, 14 பேரைக் கொண்ட உயர்மட்ட குழுவில் கரு ஜயசூரிய, ரஞ்சித் மத்துமபண்டார, சஜித் பிரேமதாச ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.
அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படக் கூடாது
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுவது தொடர்பான அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
இராஜகிரிய தேர்தல் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச சொத்துக்களை பயன்படுத்தாதிருக்குமாறும், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தனியான விளம்பரத்தை தேடிக்கொடுக்கும் வகையில் செயற்படாதிருக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் அரச நிறுவனங்களில் பிரதானிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை தேர்தல்கள் ஆணையாளரினால் சகல மாகாண சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அபிவிருத்திக்கோ திருத்தப் பணிக்கோ பயன்படுத்தும் வாகனங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அலுவலக நேரத்தில், தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருக்க இடமளிக்கக் கூடாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அரசாங்க பிரதானிகளுக்கு அறிறுத்தல் விடுத்துள்ளார்.
இதனிடையே, அரசாங்க நிறுவனங்களின் கட்டடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை தேர்தல் நடவடிக்கைக்கான பயன்படுத்த இடமளிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகங்களே பொது பலசேனாவைப் பற்றி தவறாக கூறுகின்றன: கலகொட ஞானசார தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 02:20.54 PM GMT ]
இன்று பொது பலசேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காபை பற்றி நாங்கள் பேசும் போது தமிழ் ஊடகங்கள் ஹிஜாபை பற்றி எழுதுகின்றன. நாங்கள் தீவிரவாதத்தை மட்டுமே எதிர்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten