தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

கொம்பனித் தெரு காணி வழக்கு!- ஆஜராகுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவு


யாழில் வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு - சாவகச்சேரி வடக்கில் திருடர்களின் கைவரிசை
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 02:00.56 PM GMT ]
வடக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேடபாளர்களுக்கு யாழில் பாதுகாப்பு இல்லை என தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் நாகபாம்புச் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகின்ற மதிமுகராசா விஜயகாந் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அதரிவிக்கையில், இத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்த நாள் முதல் எமக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதனால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாம் தோதல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளதுடன் எமக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கோரியுள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளர் என்றார்.
சாவகச்சேரி வடக்கில் திருடர்களின் கைவரிசை
சாவகச்சேரி வடக்கு இருவத்திப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அதற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையம் என்பனவற்றில் இரவு பெறுமதியான பொருட்களும் உண்டியலிலிருந்த பணமும் திருடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் இருந்த உண்டியலை உடைத்துப் பணத்தினைத் திருடிய திருடர்கள் ஆலயத்தின் விக்கிரகத்தினையும் திசைமாற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அத்துடன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றும் உடைக்கப்பட்டு கிற்காட்டுக்கள், பால்மா பெட்டிகள், சோப் வகைகள் உள்ளிட்ட சுமார் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொம்பனித் தெரு காணி வழக்கு!- ஆஜராகுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவு
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 11:59.44 AM GMT ]
இந்தியாவின் டாடா நிறுவனத்திற்கு வழங்குவதற்காக கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக தமக்கு போதுமான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்று பிரதேசவாசிகள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட காணியில் குடியிருந்தவர்களுக்கு போதுமான நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை என தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
07 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டதால், அதில் வசித்து வந்த 600க்கும் அதிகமான குடும்பங்கள் இருப்பிடங்கள் இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதேவேளை கொம்பனித் தெரு பிரதேசத்தில் ஒரு பேர்ச்சஸ் காணி 50 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியை கொண்டது என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், மக்களிடம் இருந்து சுவீகரிக்கப்படும் ஒரு பேர்ச்சஸ் காணிக்கு 08 லட்சம் ரூபாவை வழங்குவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்திருப்பது அநீதியானது என மனுதார்களின் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten