[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 01:47.01 PM GMT ]
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து இராஜினாமா செய்து கொண்டுள்ள அவர் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு கட்சியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற தெளிவான அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதற்கான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாகவும் கட்சி மாற்றத்தின் பின்பு இவர் இணைந்து கொள்ளும் அமைப்பில் இவருக்கு செயலாளர் பதவியை வழங்குவதற்கும் குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த தொழிற்சங்கத்தின் தலைவர் தற்பொழுது அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் நாடு திரும்பியவுடன் அந்த கட்சியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை இணைந்து கொள்வார் எனவும் தெரியவருகின்றது.
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைமைத்துவத்துடன் கடந்த சில மாதங்களாக முறுகல் நிலை இருந்து வந்ததாகவும் இதன் காரணமாகவே தான் கட்சியிலிருந்து இராஜினாமா செய்துகொள்ள தீர்மானித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் தனது நண்பர்கள் வட்டாரத்துடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஆடிமாதம் முடிந்து இவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
இன்று தாம் கட்சியில் இருந்து விலகிவிட்டமையை கட்சியின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அறிவித்ததாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து ஓரங்கட்டமையை அடுத்தே தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்முடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பலர் விலகவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர் பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பி திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய முன்னணியில் இணைந்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல் வெற்றி முழு நாட்டுக்கும் கிடைக்கும் அரசியல் வெற்றி!- மைத்திரிபால சிறிசேன
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 12:39.20 PM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தேர்தல் மூன்று மாகாணங்களில் மட்டும் பெறும் வெற்றியல்ல, அது முழு நாட்டுக்கும் கிடைக்க போகும் அரசியல் வெற்றியாக கருதுகிறேன்.
எதிர்க்கட்சி வலுவின்றி இருக்கும் சந்தர்ப்பத்தில் பெறும் வெற்றியை தரம் தாழ்த்தி கொள்ளும் மோதல்ளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
சகோதரத்துவமான நடந்து கொள்ளுமாறு, ஆளும் கட்சியில் தேர்தலில் போட்டியிடும் சகல உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறுதல், அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் கட்சியினர் ஈடுபட்டால், அவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது.
இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பெலிஸாருக்கும் இடமளிக்கப்படும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten