தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 augustus 2013

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை! கொழும்பு தூதரகம் அறிக்கை


வாழைச்சேனையில் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற படகு 8 நாட்களாக கரை திரும்பவில்லை என முறைப்பாடு
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 08:42.53 AM GMT ]
வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடலுக்கு தொழிலுக்காகச் சென்ற படகு ஒன்று கடந்த எட்டு நாட்களாக கரை திரும்பவில்லை என்று படகு உரிமையாளர் மற்றும் உறவினர்களால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் துறையடியில் இருந்து கடந்த சனிக்கிழமை (03.08.2013)  ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு இரு தினங்களில் திரும்ப வேண்டிய போதிலும், இதுவரையில் கரை திரும்பில்லை என்றும் அவர்களுடனான கையடக்கத் தொலைபேசி தொடர்பு கடலுக்குச் சென்ற தினத்தில் இருந்து செயலிழந்துள்ளதாகவும் படகு உரிமையாளர், தனது பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியால வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது நஷீர் (வயது 36), பிறைந்துறைச்சேனை தைக்கா வீதியைச் சேர்ந்த எச்.எம்.எம்.ஹபீழ் (வயது 28), வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த முஸ்தபா லெப்பை முஸ்தபா (வயது 34) ஆகிய மூவருமே மேற்படி படகில் கடலுக்குச் சென்றவர்களாவர்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர் எஸ்.எஸ்.ஹெட்டிகே கருத்துத் தெரிவிக்கையில்,
தொலைந்து போன படகு தொடர்பாக கடற்படை தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதுடன் ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்றுள்ள படகுகளுக்கும் தகவல்கள் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை! கொழும்பு தூதரகம் அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 08:53.27 AM GMT ]
கொழும்பில் உள்ள கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கிராண்ட்பாஸ் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. 
வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.
 இச்சம்பவம் குறித்து அனைத்து தரப்பு மக்களும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
அதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten