தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 augustus 2013

குருணாகல் நகரில் பொதுபல சேனா கூட்டம்: முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு


த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு பா.உறுப்பினர் சிறீதரன் தலைமையில் தேர்தல் பற்றிய அறிவுறுத்தல்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 09:18.47 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் 51 வேட்பாளர்களுக்கான தேர்தல் பற்றிய அறிவுறுத்தல் கருத்தரங்கு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேற்படி நிகழ்வினை மங்கள விளக்கேற்றி வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களும் ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்வுச் சுடரினை பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, சட்ட விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன், அபிராமி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை / பிரதேச சபை தலைவர்கள்,வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குருணாகல் நகரில் பொதுபல சேனா கூட்டம்: முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 09:02.05 AM GMT ]
பொதுபல சோனவின் பொதுக் கூட்டம் குருநாகல் நகரில் இன்று நடைபெறவுள்ளதைக் கருத்திற் கொண்டு குருநாகல் நகரிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து தற்போது குருநாகல் நகரில் உள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுபல சோனவின் பதாதையொன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டதை அடுத்து இந்தப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு அப்துல் சத்தார் வேண்டுகோளை விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து குருநாகல் நகரில் உள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மேலும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
பொதுபல சேனாவினால் நடாத்தப்படும் பொதுக் கூட்டம் குருநாகல் நகரில் ஞாயிற்றுக்கிழமை பி. ப 2.00 மணிக்கு சத்தியவாதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten