[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 04:55.31 AM GMT ]
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை அச்சீட்டுப் பணிகள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டை அச்சிடுதல் தொடர்பில் பின்பற்றப்பட்டபட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அரசாங்க அச்சம் பின்பற்றத் தவறியுள்ளது.
இந்த நிலைமை சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் தொடர்பான சகல அதிகாரங்களும் தேர்தல் ஆணையாளருக்கே காணப்படுகின்றது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முக்கொம்பனில் இராணுவத்தினரின் அடாவடி
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 03:55.28 AM GMT ]
போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டு 3 வருடங்கள் கடந்த பின்னும் தாம் வாழ்வதற்கு ஒரு வீடு அமைத்துவிட வேண்டும் என்ற அவாவுடன் இந்தியன் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது தேவையினை பெற்றுக்கொள்ள, மக்கள் மணல் ஏற்றுவதை இராணுவத்தினர் தடுத்து அடாவடித்தனம் செய்வதோடு லஞ்சம் கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட முக்கொம்பன் 150 வீட்டுதிட்டம், 65 வீட்டுத்திட்டம் மிதுசன், செக்காலை, கண்ணகைபுரம் கிழக்கு, கண்ணகைபுரம் மத்தி, கண்ணகைபுரம் மேற்கு போன்ற மிக வறுமைப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களில் மணல் தேவையினை பூர்த்தி செய்ய யாழ்ப்பாணம், கொழும்பு என்று செல்ல வேண்டியுள்ளதுடன், இவ்வாறு சென்று பெற்றுவரும் அனுமதியில் மாதம் 250 ட்ரக்ரர்லோட் அனுமதி மட்டுமே வழங்கப்படுகின்றது.
இக்கிராமங்களில் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நடைமுறைபடுத்தப்பட வேண்டிய வீட்டுத்திட்டங்கள் ஏறக்குறைய 700 ஆகும். ஒரு வீட்டிற்கு தேவையான மணலின் அளவு ஏறக்குறைய 25லோட் ஆகும். இந்நிலையில் குறித்த காலப் பகுதியில் இம்மக்களால் எவ்வாறு மணலைப் பெறுவது?
போரில் பாதிக்கப்பட்டும், வங்கிக் கடன்களாலும் மூழ்கியிருக்கும் விவசாய மக்களாகிய தமக்கு தமது ஆற்றில் மணல் அகழ்வு இராணுவம் தடுக்கின்றது. ஆனால் பாரிய ஒப்பந்தகாரர், முதலீட்டாளர்கள் எங்கள் வளங்களை சுரண்டுவதை பாராமுகமாக உள்ளனர்.
இது தொடர்பாக அரச அதிபர், உதவி அரச அதிபர் ஆகியோர் நேரில் வந்து உண்மை நிலைமையினை கண்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முக்கொம்பன் கண்ணகைபுரம் பொது அமைப்புக்கள், பயனாளிகள் வேண்டுகொள் விடுப்பதோடு, நடைபெறவுள்ள தேர்தலில் தமது வாக்குகளை அடிமைப்படுத்தல் ஊடாக பெற்றுக் கொள்ளும் ஒரு கபட நோக்கத்துடன் இராணுவத்தினர் செயற்படுவதாகவும் உணர முடிகின்றது என விசனம் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten