[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 07:24.50 AM GMT ]
பால் மாவில் டி.சீ.டி என்ற விஷ இரசாயனம் அடங்கியிருப்பதாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பொன்டேரா நிறுவனத்தினால் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யும் பால் மாவை கொழும்பு துறைமுகத்தில் இருந்து நாட்டுக்குள் கொண்டு செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளில் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உட்பட ஏனைய பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய அந்த நாட்டின் விசேட குழுவொன்று இலங்கை செல்கிறது.
அதேநேரம் நியூசிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவில் மேற்படி இரசாயனம் இருப்பதாக இலங்கை ஆய்வு நிறுவனம் ஒன்றின் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.
எனினும் இந்த ஆராய்ச்சிகளை செய்ய கூடிய போதுமான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை என நியூசிலாந்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பால்மா இறக்குமதி தொடர்பாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அந்நாட்டின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார்.
இதேவேளை இறக்குமதி செய்யும் பால்மா தொடர்பிலான விளம்பரங்களும் நீதிமன்ற உத்தரவினால் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இளவரசர் சார்ள்ஸின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய விசேட குழு இலங்கை செல்கிறது!
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 07:24.53 AM GMT ]
பிரித்தானிய மகாராணி எலிசபெத் சார்பில் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் இடத்தின் பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு பிரதிநிதிகள் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர்.
அதேவேளை மாநாட்டில் கலந்து கொள்ளும் ஏனைய நாடுகள் சிலவற்றின் தலைவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளும் இலங்கை செல்ல உள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு எதிர்வரும் நவம்பர் 15 ம் திகதி முதல் 17ம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது
Geen opmerkingen:
Een reactie posten