அரசாங்கத்தின் செயற்பாட்டால் பாரிய பொருளாதார நெருக்கடியில் மக்கள்: சுனில் ஹந்துன்நெத்தி- அம்பாறையில் யானை தாக்கி ஒருவர் பலி
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 06:03.29 AM GMT ]
அரசாங்கம் பாரிய அபிவிருத்தி பற்றி பேசி கொண்டு, கண்காட்சிகளை நடத்தினாலும் இந்த வீண் விரயம் செய்யும் அரசாங்கத்தின் பொருளாதாரம் காரணமாக நாட்டு மக்கள் தமது அன்றாட வாழ்க்கை நடத்தி செல்ல முடியாதிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிவேரிய பிரசேதத்தில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் மக்கள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சம்பவத்திற்கு இராணுவத் தளபதி உட்பட மூன்று பேர் பொறுப்புக் கூறவேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மக்கள் தமது அன்றாட வாழ்க்கை கொண்டு நடத்த முடியாது பொருளாதார ரீதியில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
அரசாங்கம் மக்களின் அன்றாட பாவனைக்கான பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாளுக்குள் வரி சுமைகளை அரசாங்கம் மக்கள் மீது ஏற்றி வருகிறது.
மக்களிடம் இருந்து வரி வசூலிப்பின் மூலம் பெறும் பணத்தை கண்காட்சிகளை நடத்த அரசாங்கம் செலவிட்டு வருகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் வீழ்சியடைந்துள்ளது.
அரசாங்கத்தின் புள்ளி விரங்களின்படி 2012 ம் ஆண்டுடின் முதல் ஆறு மாதங்களில் 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வேகம், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 6 வீதமாக குறைந்துள்ளது என்றார்.
அம்பாறையில் யானை தாக்கி ஒருவர் பலி
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை நடந்த இந்த சம்பவத்தில் மத்திய முகாம் 18 ஆம் கொலனியை சேர்ந்த 35 வயதான ஜகத் சந்திரகுமார என்பவரே உயிரிழந்தாக மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரோஹண முனசிங்க தெரிவித்தார்.
இவர் இன்று அதிகாலை 5.30 அளவில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டுச் சென்ற போது, வீட்டுக்கு அருகில் இருந்த யானை அவரை தாக்கியுள்ளதுடன் அவர் சம்பவ இடத்திலேலேயே உயிரிழந்துள்ளார் எனவும் முனசிங்க கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் அண்மைகாலமாக காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதுடன் அவை கிராமங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.
இராணுவத் தளபதி கூறுவதை நம்புவதற்கு மக்கள் மாடுகள் அல்ல: சரத் பொன்சேகா
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 06:00.01 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கட்டுப்படுத்தியிருக்க முடியும். மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே இராணுவத்தினர் பொல்லுகளை எடுத்து வந்தனர்.
நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இப்படியான நடவடிக்கைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்தியதில்லை. .இராணுவத்தின் கௌரவம் அழிக்கப்பட்டு விட்டது.
மூன்று பேரே இந்த சம்பவத்திற்கு பொறுப்புக் கூறவேண்டும். கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு அரசாங்கம் அணுசரனை வழங்கும் என்று ஒரு பைத்தியகாரன் கூறியதை நான் கேட்டேன். மக்களை கொலை செய்து விட்டு, இறுதிச் சடங்குகளுக்கு அணுசரனை வழங்கும் உலகில் ஒரே நாடு இலங்கையாகும்.
மூன்றாம் தரப்பு இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். அப்படியானால் அந்த மூன்றாவது சக்தியை இராணுவம் அடக்கியிருக்க வேண்டும்.
அதனை விடுத்து அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது இராணுவத்தின் கடமையல்ல. காற்சட்டைகளை அணிந்து கொண்டுதான் இவர்கள் இப்படியான கதைகளை கூறுகின்றனரா?.
இராணுவத் தளபதி மக்களை மாடுகள் என நினைத்து இதனை கூறியுள்ளார். இவர்கள் நாட்டு மக்களை மாடுகள் என்று நினைத்து செயற்படுகின்றனர் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten