தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

பொதுநலவாய மாநாட்டை இலக்கு வைத்து பிரிட்டன் வாழ் புலி ஆதரவாளர்கள் போலிப் பிரச்சாரம்!


போலி நாணயத்தாள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 4 பேர் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது!
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 05:32.24 AM GMT ]
கிளிநொச்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த போலி நாணய தாள் வர்த்தகம் தொடர்பில் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலில், 28 போலி ஆயிரம் ரூபா நோட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணைகளில் கிடைத்த தகவல்களை அடுத்து, வவுனியா பிரதேசத்தில் 20 போலி நோட்டுகளுடன் மற்றுமொரு நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட இரண்டு நபர்களிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர், இந்த போலி நாணயத்தாள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நபர் என தெரியவந்துள்ளது.
போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் தாம் கைப்பற்றியதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் நால்வரும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
பொதுநலவாய மாநாட்டை இலக்கு வைத்து பிரிட்டன் வாழ் புலி ஆதரவாளர்கள் போலிப் பிரச்சாரம்!
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 02:59.13 AM GMT ]
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து பிரிட்டன் வாழ் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் போலி பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இதற்கென பத்து மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்களை ஒதுக்கீடு செய்துள்ளனர்.
போலிப் பிரச்சாரங்களின் மூலம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை ரத்து செய்யும் நோக்கில் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண கும்பலொன்று இதற்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளது.
2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையினலான தமிழர்கள் காணாமல் போயுள்ளமை, வடக்கு இராணுவப் படையணிகளை அதிகரித்தல், தமிழ் மக்களின் காணிகள் கொள்ளையிடப்படுகின்றமை, தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள முஸ்லிம் குடியேற்றங்களை அமைத்தல், நிலையான இராணுவ முகாம்களை அமைத்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக பிரச்சாரம் செய்யப்பட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சிக்கு கனேடிய புலிகள் வலையமைப்பும் ஒத்துழைப்பு வழங்க உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten