[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 04:45.53 AM GMT ]
கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் வித்தியாலய மைதானத்திலும் காத்தான்குடியில் மஸ்ஜிதுல் குபா ஏற்பாட்டில் ஆற்றங்கரை முன்றலிலும், காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாட்டில் ஏத்துக்கால் கடற்கரைத் திடலிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
மஸ்ஜிதுல் குபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பேருரையும் மௌலவி நஷ்மல் (பலாஹி) நிகழ்த்தினார்.
தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பேருரையும் மௌலவி அஸ்பர்(பலாஹி) நிகழ்த்தினார்.
இதேவேளை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றுள்ளது.
புனித நோன்புப் பெருநாள் தலைப்பிறை தொடர்பில் பிறை தென்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு அதை கிண்ணியா ஜம்மியதுல் உலமா சபை ஏற்றுக்கொண்டு அறிவித்தும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அதை ஏற்றுக் கொள்ளாது ரமழானை முப்பதாக பூர்த்தியாக்குமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்ற தலைபிறை பார்க்கும் மாநாட்டில் பிறை தென்படாததால் வெள்ளிக்கிழமையே நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டது.
எனினும் கிழக்கு முஸ்லிம்கள் பெரும்பாலானோர் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
வெலிவேரிய சம்பவம் தொடர்பில் தமரா, தயான் உட்பட்டோர் அரசாங்கத்திடம் எழுப்பியுள்ள 9 கேள்விகள்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 02:38.20 AM GMT ]
இது தொடர்பில் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் முன்னாள் பிரதிநிதிகளான தயான் ஜெயதிலக்க�� தமாரா குணநாயகம்�� நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க உட்பட்ட பலர் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
வெலிவேரியாவுக்கான நீதி என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குடிநீர் தொடர்பில் வெலிவேரியா மக்கள் நடத்திய போராட்டம் தொடர்பில் உள்ளுர் அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
இதன் காரணமாகவே நிலைமை மோசமானதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 9 கேள்விகள் இந்த இலங்கையர் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ளது.
வெலிவேரியா சம்பவத்தின்போது இராணுவத்தை அழைத்தது யார்?
துப்பாக்கி சூட்டை நடத்துமாறு இராணுவத்துக்கு உத்தரவிட்டது யார்?
இராணுவத்தை அழைப்பதற்கு முன்னர் சட்டத்தை அமுல்படுத்துவோரின் உரிய செயற்பாடு இருந்ததா?
பிரச்சினையில் தலையிட்டதாக கூறப்படும் மூன்றாம் உள்ளுர் தரப்பு எது?
சம்பவத்தின் போது உத்தியோகபற்றற்ற ஊரடங்கு, மின்சார தடை, தொலைப்பேசி செயலிழப்பு போன்ற விடயங்களை யார் மேற்கொண்டார்கள்?
ஏன் பத்திரிகையாளர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டனர்?
இந்த சம்பவத்தில் இராணுவத்தினரின் செயற்பாட்டை இராணுவப்பேச்சாளர் நியாயப்படுத்தியுள்ளார். ஏனில் அரசாங்கத்தின் நிலைபாடும் அதுவா?
வெலிவேரியா போராட்டத்துக்கு அரசியல்ழு ஒன்றே காரணம் என்று பாதுகாப்பு அமைச்சு கூறுவது உண்மையானால் அதற்காக இராணுவத்தை பயன்படுத்துவது சரியான காரியமா?
பொதுமக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ள வேண்டிய உரிமை இருக்கிறது.
எனவே வெலிவேரிய சம்பவத்தின் போது எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? எத்தனை பேர் காயமடைந்தனர்? எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர்? எத்தனை பேர் காணாமல் போயினர்?
இந்த கேள்விகளுக்கு விடைகளை காணும் போதே ஐககிய இலங்கைக்குள் அனைவரும் உரிமையுடன் வாழும் சூழல் ஏற்படும் என்று இலங்கையர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten