dinsdag 6 augustus 2013

இலங்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்!- ஜெயலலிதா! லோக்சபாவிலும் அதிமுக கோரிக்கை


அரசியலுக்குள் நுழைந்துள்ள விக்னேஸ்வரன் நல்ல நீதிபதி இல்லை: விமல் வீரவன்ச காட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 09:31.30 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அரசிலுக்குள் நுழைந்துள்ளபடியால், அவர் நல்ல நீதிபதியாக இருந்திருக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஒருவர் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறி வாழவேண்டும். இல்லையென்றால் அவர்கள் நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களால் பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள்.
வெளிநாடுகளில் சென்று குடியேறாமல் அரசியலுக்குள் நுழையும் நீதிபதி உண்மையானவராக இருக்க முடியாது. அவ்வாறு ஒருவர் அரசியலுக்குள் வருவாரெனின் அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்து அதன் ஊடாக தனி ஈழம் அமைத்து விடுவர்.
அந்தவகைகயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகள் மூலம் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை வைத்து சாதித்துகொள்ள முற்படுகின்றனர்.
இதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் துணைபோகக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்!- ஜெயலலிதா! லோக்சபாவிலும் அதிமுக கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 07:05.51 AM GMT ]
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டும் இந்தியா மெத்தனமாக இருப்பதால் மீனவர்கள் கொதித்துப் போயிருக்கின்றனர், இலங்கை மீது மட்டுமல்ல தங்களுக்கு உதவ முன்வராத மத்திய அரசின் மீதும் கடும் வருத்தத்தில் அவர்கள் இருக்கின்றனர் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். 
மீனவர்கள் தொடர்பில் மீண்டுமொருமுறை பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கும் அவர், தனது கடந்த கடிதத்திற்குப் பின்னர், இராமேஸ்வரத்திலிருந்து ஐந்து படகுகளில் சென்ற 20 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டு நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இவ்வாறாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 90 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கைக் கடற்படையினர் மட்டுமல்ல இலங்கையைச் சேர்ந்த சில விஷமிகளும் தமிழக மீனவர்களைத் தாக்குகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆக இலங்கை நட்பு நாடாக நடந்துகொள்ளவில்லை, அது தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவரும் சூழலில் அந்நாட்டிற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியத் தூதரக அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு 90 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பிரதமர் உத்திரவிடவேண்டுமென தனது கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கிறார்.
இலங்கையில் உள்ள மீனவர்களை மீட்க லோக்சபாவில் கோரிக்கை
இந்திய மீனவர்களை பாதுகாக்க இந்திய மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றுக்கோரி நேற்று லோக்சபாவில கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன் இலங்கை மற்றும் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் பிரச்சினையை முன்வைத்த அதிமுக உறுப்பினர் எம் தம்பித்துரை ஈரானிய சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தினார்.
இதேவேளை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்குள் வந்தே தமிழக மீனவர்களை கைதுசெய்து செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Geen opmerkingen:

Een reactie posten