தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

நவநீதம்பிள்ளைக்கு நியாயமான முறையில் விளக்கமளிக்கத் தயார்: ஹக்கீம்!


எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு, நாட்டின் நீதி அமைச்சர் என்ற ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக நியாயமான முறையில் விளக்கமளிப்பேன். இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றது.
எனினும், நாட்டின் நீதியமைச்சர் என்ற ரீதியில் கடமைகளிலிருந்து விலகிச் செயற்பட மாட்டேன். என்னிடம் சில பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, வழக்கு விசாரணைகள் கால தாமதமாகின்றமை போன்றன தொடர்பில் நவனீதம்பிள்ளை கேள்வி எழுப்பக் கூடும்.
அவ்வாறான கேள்வி எழுப்பினால் பொறுப்புணர்ச்சியுடன் நாட்டுக்காக நியாயமான விளக்கங்களை அளிப்பேன். கட்சியின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதனைப் புரிந்து கொள்வார். ஜனாதிபதி பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
எனினும், சில பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.
யட்டிநுவர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten