இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாட்டின் எந்த பகுதிக்கும் சென்று விரும்பிய தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நாடாத்த முடியும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமைதி, சுதந்திரமான சூழ்நிலைகள் குறித்து நேரடியாக கண்டறிவதற்காக மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் 25ம் திகதி இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்ளும் அவர் எதிர்வரும் 31ம் திகதி வரை தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்போது, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு பயிற்சிகள், அவர்களின் சமூகமயப்படுத்தல் நல்லிணக்கம், உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போன்ற விடயங்களை ஆராய முடியும் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பல்வேறு நபர்கள், குழுக்கள் தகவல்களுக்கு அமைய செயற்படாமல், இலங்கையின் தற்போதைய உண்மையான நிலைமையை நேரில் காண ஆணையாளருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கடந்த மாரச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten