[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 12:36.34 PM GMT ]
தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சசங்க ஜயசேகர, சந்திம தேரர் சமய மற்றும் ஒழுக்கம் தொடர்பான தவறை செய்துள்ளதாகவும் எனினும் தவறு இயற்கையானது என கூறியுள்ளார்.
சந்தேக நபரான தேரரின் கணனியில் இருக்கும் வீடியோ படங்கள் தொடர்பில் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சந்தேக நபரான விகாரதிபதி இரண்டு பெண்களை கொண்டு ஆபாசப் படத்தை கணனியில் உள்ள கமரா மூலமாக பதிவுசெய்துள்ளார்.
அந்த பெண்களுக்கு தெரியாமல் அதனை பதிவு செய்து, இறுவட்டுக்க்களில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை பல்லின நாடல்ல! சிங்கள பௌத்த நாடு: பொதுபல சேனா
[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 12:37.31 PM GMT ]
குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்ற பொதுபலசேனாவின் மாவட்ட மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருகின்றன.
இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் அவர்களை ஓட ஓடத் துரத்துவோம்.
முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று மேற்கொள்ள வேண்டும்.
பெளத்த நாட்டில் இதற்கு இடமில்லை. பௌத்த சிங்களவர்களின் சனத்தொகையை அதிகரிக்க பெளத்த குடும்பத்தில் கூடுதலாகப் பிள்ளைகளைப் பெற வேண்டும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten