தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

நவநீதம் பிள்ளை வெலிவேரிய துப்பாகிச்சூடு பற்றி விசாரணை நடத்துவார் !


சுத்தமான குடி நீர் வேண்டும் என்றுகோரி அமைதியாக ஆர்பாட்டம் நடத்திய சிங்களப் பொதுமக்கள் மீது இலங்கை இராணுவம் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில் 3 பேர் இறந்துள்ளார்கள். இருப்பினும் சுமார் 7 பேர் இறந்ததாகவும் இலங்கை அரசாங்கம் அதனை மூடி மறைப்பதாகவும், ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சாட்டிவருகிறது. இந் நிலையில் இம்மாதம் இறுதியில் நவநீதம் பிள்ளை இலங்கை செல்லவுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக இருக்கும் அவர், இலங்கை செல்லும்வேளையில் இச் சம்பவம் தொடர்பாக அவர் விசாரணை நடத்தவேண்டும் என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டுள்ளார்கள் எதிர்கட்சியினர். 

இலங்கைக்கான விஜயத்தின்போது அவர் எதிர்கட்சி தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இன் நிலையிலேயே முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு கூறியுள்ளது. இலங்கை செல்லும் அவரை வெலிவேரிய பிரதேசத்துக்கு அழைத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. 3 சிங்களவர்கள் கொல்லப்பட்டதற்கு, அவர்கள் இவ்வளவு தூரம் கொதிப்படைந்துள்ளார்கள். ஆனால் 40,000 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை அவர் சென்று பார்வையிடுவாரா ? அவர் அவ்வாறு பார்வையிடவேண்டும் என்று எந்த தமிழ் அமைப்புகளாவது கோரிக்கை விடுத்துள்ளதா என்று தெரியவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten