woensdag 7 augustus 2013

பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடத்துவது குறித்து மருத்துவர் மனோகரன் அதிருப்தி!

மத்தள விமான நிலையத்தில் பழுதுபார்த்தல் பணிகள்!- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 03:58.40 PM GMT ]
ஜேர்மனின் உதவியுடன் பிராந்தியத்துக்கான விமான பழுது பார்த்தல் நிலையம் ஒன்றை மத்தளை விமான நிலையத்தில் அமைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று அறிவித்துள்ளது.
ஜேர்மனின் லூப்தான்சா விமான நிறுவன உதவியுடன் 209 மில்லியன் அமரிக்க டொலர் முதலீட்டுடன் இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அடுத்த ஜூலை மாதம் முதல் இந்தப்பணிகள் ஆரம்பமாகும் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுக்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சீன உதவியுடன் மத்தளை விமான நிலையம் அமைக்கப்பட்டபோதும் அதற்கு சர்வதேச விமானங்கள் வருவதற்கு அச்சம் வெளியிட்டு வருகின்றன.
இதனையடுத்தே அங்கு விமான பழுது பார்த்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடத்துவது குறித்து மருத்துவர் மனோகரன் அதிருப்தி!
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 02:18.02 PM GMT ]
இலங்கையில் நீதி மற்றும் நியாயத்தை நிறைவேற்றுவது தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் இருந்து வரும் வேளையில், பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை கொழும்பில் நடத்துவது குறித்து மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 
2006ம் ஆண்டு திருகோணமலையில் தனது மகன் மற்றும் அவரது நண்பர்கள் அரச படையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கையில் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாதது பற்றி, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் இந்த சம்பவம் குறித்து வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்பதால் தான் மற்றும் தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மனோகரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கட்டளையிட்ட பொலிஸ் அதிகாரி, பிரதிப் பொலிஸ் மா அதிபராக மீண்டும் திருகோணமலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணை மற்றும் நியாயத்தை வழங்குவது தொடர்பில் இலங்கை இணங்கியுள்ள சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு அமைய விசாரணை ஒன்றை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் தனக்கு உதவுமாறும் கமலேஷ் சர்மாவின் பிரதிநிதி ஒருவரை லண்டனில் சந்தித்த போது, மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten