woensdag 7 augustus 2013

இந்தியாவுடனான சம்பூர் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கையில் குறைபாடுகள் உள்ளன!- சம்பிக்க ரணவக்க

காதல் தொடர்பால் பாடசாலை மாணவன் கொலை?!- உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் தவறுகள் இருப்பதாக தெரிவித்து தொலைபேசி அழைப்பை எடுத்தவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 12:48.29 PM GMT ]
காதல் தொடர்பொன்றை அடிப்படையாக கொண்டு பாடசாலை மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாத்தறை, தேவேந்திரமுனை பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவனின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மாணவன் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளதாகவும் இதன் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் மாணவனை கொலை செய்திருக்கலாம் என பெற்றோர் கூறியுள்ளனர்.
தேவேந்திரமுனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் தவறுகள் இருப்பதாக தெரிவித்து தொலைபேசி அழைப்பை எடுத்தவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்
இலங்கையில் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் தவறுகள் இருப்பதாக கூறி பரீட்சைகள் திணைக்களத்திற்கு தினமும் தொலைபேசி அழைப்புகளை எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த உள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சந்தேக நபர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பரீட்சைகளில் பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் ஒரு அவசர தொலைபேசி எண்ணையும் வழங்கியிருந்தது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் இன்று பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்தியாவுடனான சம்பூர் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கையில் குறைபாடுகள் உள்ளன!- சம்பிக்க ரணவக்க
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 01:03.35 PM GMT ]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சம்பூர் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கையில் குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் மின்வலு எரிசக்தி அமைச்சரும், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அமைதியான மரணத்திற்கு பாதை அமைக்கும் விஷங்கள் நிறைந்த உணவு என்ற தலைப்பில் கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பூர் உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் மின்சார பாவனையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றார்.
அதேவேளை சம்பூர் நிலக்கரி மின்சார உற்பத்தி திட்டத்திற்கு இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று தகவல் வெளியிட்டிருந்தன.
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் இந்த மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க ஆறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தியாவின் அனல் மின் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன 50 வீத பங்குகளை கொண்டுள்ள இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மின்சார நிலையத்தில் 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கொள்வனவு செய்ய இந்தியா தயாராகி வருவதுடன் அதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
திருகோணமலையில் இருந்து கடல் வழியாக கோபல் இணைப்பின் ஊடாக தமிழகத்தின் மதுரைக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten