zondag 11 augustus 2013

ஆபாச படம் எடுத்த விகாராதிபதி கைது- சிறுத்தைத் தோலை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது


[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013,  ]
யுவதி ஒருவரை பயன்படுத்தி ஆபாச வீடியோ படத்தை ஒளிப்பதிவு செய்த பௌத்த விகாரரையொன்றின் விகாராதிபதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான விகாரதிபதி, பெந்தோட்ட பிரதேசத்தில் 19 வயது யுவதியை பயன்படுத்தி ஆபாச வீடியோ படத்தை ஒளிப்பவு செய்து இதனை சீடிகளில் பதிவு செய்துள்ளார்.
ஆபாச காட்சிகள் வீடியோவில் இருப்பதாகவும் விகாராதிபதி அதனை தானியங்கி கமரா மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட விகாராதிபதி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தைத் தோலை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது
ஹபரணை காட்டுப் பகுதியில் சிறுத்தை ஒன்றை சுட்டுக்கொன்று அதன் தோலை 2.5 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 5 நீளமான அந்த சிறுத்தை தோலை வர்த்தகர் ஒருவரிடம் விற்பனை செய்ய சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.
ஹபரணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் வர்த்தகர்களை போல் நடித்து இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து சிறுத்தை தோலும் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten