zondag 11 augustus 2013

மட்டக்களப்பில் வெளிநாடு அனுப்புவதாக கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறும் அப்பாவி இளைஞர்கள்


முன்னாள் இராணுவ தளபதி டெனிஸ் பெரேரா மரணம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 10:59.44 AM GMT ]
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் டெனிஸ் பெரேரா, தனது 83வது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்தார்.
 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை இலங்கையின் 8வது இராணுவ தளபதியாக இவர் கடமையாற்றினார்.
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர், நியூசிலாந்து, பப்புவா நியூகினியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளுக்காக இலங்கையின் உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வெளிநாடு அனுப்புவதாக கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறும் அப்பாவி இளைஞர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 10:48.15 AM GMT ]
குருணாகல், அம்பாறை, மொனறாகல மற்றும் கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு  படுவான்கரைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களிடம் வெளிநாடுகளுக்கு குறைந்த கட்டுப்பணத்தில் அனுப்புகிறோம் கூடிய சம்பளத்தைப் பெறலாம் என பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

குறித்த நபர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பணத்தினை இழந்தவர்களும் இருக்கின்றார்கள். இதுபோன்ற சம்பவம் ஒன்று படுவான்கரையிலுள்ள சுரவணையடியூற்று கிராமத்தில இடம் பெற்றுள்ளது.
இந்தக் கிராமத்திலுள்ள இளைஞர்கள் 6 பேரினை குருணாகலைச் சேர்ந்த பொரும்பான்மை இனத்தனைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.
தற்போது அவர்கள் மலேசியாவில் தொழில் வாய்ப்புக்களுக்காகச் சென்று நிர்க்கதியாகியுள்ளார்கள். அவர்களின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேரடியாக தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள சுரவணையடியூற்று கிராமத்தினைச் சேர்ந்த்த துரைராசா நிர்முகராசா (வயது 33) , யோகராசா சிசிக்குமாரன் (வயது 30) , சிவராசா தர்மராசா (வயது 33) , குகாலிங்கம் சந்திரசேகரம் (வயது 23) , கங்காதரன் திருக்குமார் (வயது 37) , சந்திரசேகரம் திருக்கணேஸ் (வயது 30) ஆகிய ஆறு பேரையும் நாட்டிற்கு திருப்பி அழைந்துவர ஏற்பாடு செய்து தருமாறுகோரி விபரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.
குருணாகலைச் சேர்ந்த முகவர் ஒருவரால் தொழில் வாய்ப்புக்காக மலேசியாவிற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், மலேசியாவிலுள்ள கும்பல் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டு துன்பறுத்தப் படுவதாகவும் குற்றச்செயல்கள் போன்ற வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முற்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமையகத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten