[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 03:19.36 AM GMT ]
இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1080 பேர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் மக்கள் மத்தியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட இராணுவத்தைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள தேசிய சமாதானப் பேரவை, நாடு முழுவதும் இராணுவத்தின் வகிபாகத்தை கட்டுப்படுத்துமாறும் அரசிடம் ஆணித்தரமாக கோரிக்கை விடுத்துள்ளது.
திருமணமான பெண்ணுடன் கள்ளத் தொடர்பு பேணியமை, காணிப் பிரச்சினை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம், மதுபோதை, போதைப் பொருள் பயன்பாடு போன்ற காரணிகளினால் ஏற்பட்ட முரண்பாடுகளில் கொலைகளை மேற்கொண்டவர்களும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் ஆகிய காரணிகளுக்காகவும் அதிகளவானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகளவான மரண தண்டனைக் கைதிகள் வெலிக்கடை மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த இராணுவம் தேவையில்லை! தேசிய சமாதானப் பேரவை அரசிடம் வலியுறுத்து
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 03:41.42 AM GMT ]
வெலிவேரியவில் குடிதண்ணீருக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரைக் கொன்றதையும் பலரைக் காயப்படுத்தியமையையும் கண்டித்து தேசிய சமாதானப் பேரவை நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஒன்றுகூடுவதற்கான தமது உரிமையை வெலிவேரிய மக்கள் அனுபவிப்பதைத் தடுத்து, அவர்களை ஒடுக்குவதற்காக இராணுவத்தையும் கொலைகாரச் சூட்டு முறையையும் இலங்கை அரசு பயன்படுத்தியமை குறித்து அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது.
இலங்கையில் சிவில் போர் ஏற்படுவதற்கு முன்னர், அரச அதிபர் அல்லது மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மட்டுமே துப்பாக்கிச் சூடு அதுவும் முழங்காலுக்குக் கீழே சுடும் நடத்தும் உத்தரவை வழங்க அதிகாரம் கொண்டிருந்தார்கள் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
சுடுவதற்கு முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்படப் போகிறது என்ற எச்சரிக்கை சத்தமாக விடுக்கப்பட வேண்டும். ஆனால் வெலிவேரியவில் இராணுவம் எந்தவித எச்சரிக்கையும் இன்றிச் சுட்டுத் தள்ளியுள்ளதாகவே தெரிகிறது என்கிறது அறிக்கை.
இந்த வன்முறையிலிருந்து தப்புவதற்காகப் பாதுகாப்புத் தேடி வழிபாட்டிடங்களுக்குள் தஞ்சமடைந்தவர்களும் தாக்கப்பட்டிருக்கின்றனர் என்று அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது.
மத வழிபாட்டிடங்களுக்குள் பாதுகõப்புத் தேடி ஓடும் எந்தவொரு பொதுமகனையும் ஆயுதம் தரித்தவர்கள் தாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது என அறிக்கை சாடுகிறது.
இராணுவமயப்படுத்தப்படாத அரசாட்சியைக் கொண்டு நடத்த வேண்டும் என விழித்தெழ வேண்டிய அவசியத்தை வெலிவேரிய சம்பவம் அரசுக்கு உணர்த்தியுள்ளதாக சமாதானப் பேரவை கூறுகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்து பொலிஸ் திணைக்களத்தை வெளியே எடுக்க வேண்டும் என்ற, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது எனவும் அது கூறுகின்றது.
போரின் பின்னரான காலத்தில் இராணுவமும் மக்களும் இதற்கு முன்னரும் முரண்பட்டுக் கொண்ட சமயங்களை சமாதானப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
வலிகாமம் வடக்கு மக்கள் தமது நிலங்கள் எடுக்கப்படுவதற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் இடைமறிக்கப்பட்டமை,
எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டித்து சிலாபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை,
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை,
வெலிக்கடை சிறைக் கலவரத்தில் 40 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை,
போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை,
கிறீஸ் பூதம் தொடர்பில் கண்டனம் வெளியிட்ட நெடுங்கேணி மக்கள் தாக்கப்பட்டமை
என்பன போர் முடிந்த பின்னர் இராணுவத்தால் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் என்று பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, வெலிவேரியவில் உண்மையான துப்பாக்கிக் குண்டுகளைச் சுடச்சொல்லி உத்தரவிட்டது யார் என்பதையும் அதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிவதற்காகவும் வெலிவேரிய சம்பவம் குறித்து அரசு சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தவேண்டும்.
சம்பவத்தில் இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும், இராணுவத்துக்கும், பொலிஸாருக்கும் உத்தரவிடும் தலைவர்கள் வேறுபடுத்தப்படவேண்டும் என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை செயற்படுத்தப்படவேண்டும்,
பெரும் வன்முறை அல்லது ஒழுங்கீனம் ஏற்படுகையில் பொலிஸாரால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது என்கிற நிலை ஏற்பட்டால் ஒழிய அமைதியை நிலைநாட்ட இராணுவத்தைப் பயன்படுத்தும் போக்கை அரசு கட்டுப்படுத்தவேண்டும் என்று சமாதானப் பேரவையின் அறிக்கை வலியுறுத்துகின்றது.
ஒன்றுகூடுவதற்கான தமது உரிமையை வெலிவேரிய மக்கள் அனுபவிப்பதைத் தடுத்து, அவர்களை ஒடுக்குவதற்காக இராணுவத்தையும் கொலைகாரச் சூட்டு முறையையும் இலங்கை அரசு பயன்படுத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten